சி.எஸ்.கே அணியின் ரசிகர்களிடம் உருக்கமாக மன்னிப்பு கேட்ட தீபக் சாகர் – எதற்கு தெரியுமா?

Deepak
- Advertisement -

நடப்புச் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நடைபெற்றுவரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடரில் அட்டகாசமான துவக்கத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து கடைசியாக நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் வெற்றி பெற்று தற்போது ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் மிகவும் பின்தங்கியுள்ளது.

சென்னை அணியின் இந்த மிகப்பெரிய சறுக்கலுக்கு முக்கிய காரணமாக முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் காயம் காரணமாக சென்னை அணியில் இடம் பெறாது பார்க்கப்படுகிறது. ஏனெனில் பவர்பிளே ஓவர்களிலேயே விக்கெட் வீழ்த்தும் திறமை உடைய தீபக் சாஹர் தற்போதைய சி.எஸ்.கே அணியில் இல்லாததால் நமது அணி பந்துவீச்சில் தடுமாறி வருகிறது.

- Advertisement -

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மெகா ஏலத்தில் 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்த வேளையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 தொடரின் போது காயம் ஏற்பட்டதன் காரணமாக அவர் இந்த தொடரில் விளையாட முடியாமல் போனது. மேலும் தனக்கு ஏற்பட்ட காயத்திற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வந்த தீபக் சாகருக்கு மேலும் ஒரு காயம் ஏற்படவே அவர் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலுமாக விலகினார்.

இது சிஎஸ்கே அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது மட்டுமின்றி அணியின் சரிவுக்கு முக்கிய முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய தீபக் சாஹர் தற்போது சிஎஸ்கே அணியின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் :

- Advertisement -

சிஎஸ்கே அணிக்காக இந்த ஆண்டு விளையாட முடியாமல் போனது மிகவும் வருத்தம். ஆனால் அடுத்த சீசனில் முன்பை விட பலமான வீரராக வலிமையுடன் மீண்டும் திரும்ப வருவேன். எனக்கு ஆதரவு தெரிவித்து வரும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரசிகர்களின் ஆசிர்வாதம் எனக்கு தேவைப்படுகிறது என்று உருக்கமான வேண்டுகோளை தீபக் சாகர் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இப்போவாச்சும் சான்ஸ் கொடுங்க! ரசிகர்களே முன்வந்து கோரிக்கை வைக்கும் அளவுக்கு அசத்தும் – தரமான வீரர்

அவரது இந்த பதிவிற்கு ரசிகர்களும் தங்களது கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பது கூடுதல் சிறப்பம்சம். அதோடு இந்த ஐ.பி.எல் தொடரை அவர் தவறவிடுவது மட்டுமின்றி எதிர்வரும் டி20 உலகக்கோப்பையையும் அவர் தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement