இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சஹர் டி20 இந்திய அணியின் நம்பிக்கையான வேகப்பந்து வீச்சாளராக இருந்துவருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இவர் ஆடி வருகிறார். தற்போது இவருக்கு 28 வயதாகிறது. இந்திய அணிக்காக இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் 7 டி20 போட்டிகளில் ஆடி 16 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

குறிப்பாக டி20 போட்டிகளில் பட்டையைக் கிளப்பி உள்ளார். ஆனால் ஒரு காலத்தில் இளம் வீரராக பயிற்சிக்கு சென்ற போது உள்ளூர் போட்டிகளில் உன்னால் ஆட முடியாது என்று துரத்திவிட்டு இருக்கிறார்கள்.
2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் கிரிக்கெட் அகாடெமியின் இயக்குனராக இருந்த கிரேக் சாப்பல் இவரை மாநில அணிக்கு தகுதி இல்லாதவர் என்று ரிஜெக்ட் செய்து இருக்கிறார் மேலும் இளம் வயதில் தகுதியுடன் இருந்த அவரை மாநில அணியில் விளையாடவிடாமல் நிராகரித்துள்ளார். இதுகுறித்து தற்போது சாகரின் அப்பா பேசியுள்ளார்..

அவர் கூறுகையில் நான் வீட்டிலேயே அவனுக்கு ஒரு ஆடுகளத்தை அமைத்துக் கொடுத்தேன். அப்போது அவனுக்கு 12 வயது இருக்கும். என் கண்காணிப்பின் கீழ் 24 மணி நேரமும் பந்துவீசி கொண்டே இருந்தான். 24 மணி நேரம் அவனுக்கு போதவில்லை. சுமார் ஒரு லட்சம் பந்துகள் வீசி பந்து வீச்சாளராக மாற்றிக்கொண்டான்.
நாங்கள் ஆக்ராவிலிருந்து ராஜஸ்தானுக்கு குடி பெயர்ந்தோம். உள்ளூர் அணிக்காக விளையாட வாய்ப்பு வந்தது. அதன் பின்னர் கடுமையாக பயிற்சி செய்து அவனை நிராகரித்த அதே ராஜஸ்தான் அணிக்காக 2011 ஆம் ஆண்டு ரஞ்சி தொடரிலும், 2012 ஐ.பி.எல் தொடரில் தேர்வாகி விளையாடினார் தீபக் சாஹர் என்று மனம் நெகிழ பேசியுள்ளார் தீபக் சாஹரின் தந்தை.

இன்று தனது 28 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இவருக்கு நாமும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம். அவரின் பிறந்தநாள் சிறப்பு பதிவாகவே இந்த பதிவினை நாங்கள் தொகுத்திருக்கிறோம் நண்பர்களே.



