துவக்க வீரரான சுப்மன் கில்லின் இடத்திற்கு ராகுலை விட இவரே தகுதியானவர் – முன்னாள் இந்திய வீரர் கருத்து

Gill
Advertisement

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய அணியின் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என அனைவரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே அடைந்த தோல்வியின் காரணமாக இந்திய அணியில் இருக்கும் வீரர்களுக்கு மிகப்பெரிய அழுத்தம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து தொடரில் நிச்சயம் இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

IND

அதில் முக்கிய மாற்றமாக இந்திய அணியின் துவக்க வீரரான சுப்மன் கில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து சுப்மன் கில்லின் இடத்திற்கு யார் துவக்க வீரராக விளையாடுவார் என்ற கேள்வி தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தற்போதைக்கு அணியில் இரண்டு துவக்க வீரர்கள் ஆப்ஷன் உள்ளதால் மாயங்க் அகர்வால் அல்லது ராகுல் ஆகியோரில் ஒருவர்தான் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த இருவரில் யார் துவக்க வீரராக களம் இறங்கலாம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான தீப் தாஸ்குப்தா தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணிக்கு தற்போது துவக்க வீரர்களாக ராகுல் மற்றும் அகர்வால் ஆகிய இருவர் மட்டுமே உள்ளனர். இதன் காரணமாக இவர்கள் இருவரில் ஒருவரை நாம் தேர்வு செய்தாக வேண்டும்.

Agarwal

ஆனால் என்னை பொறுத்தவரை அகர்வால் துவக்க வீரருக்கான இடத்தில் சரியாக பொருந்துவார் ஏனெனில் இரண்டு மூன்று ஆட்டங்களில் அவர் சரியாக விளையாடவில்லை என்றாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் அவர் துவக்க வீரராக அவர் சிறப்பாக விளையாடி உள்ளார். அதே வகையில் ராகுலை கணக்கில் கொள்ளும்போது அவர் மிடில் ஆர்டரில் இன்னும் சிறப்பாக விளையாடக் கூடியவர். அதுமட்டுமின்றி அதிரடியாக ஆடக்கூடிய வீரர் என்பதால் அவருக்கு பதிலாக துவக்க வீரராக அகர்வால் களம் இறங்குவதே சரியான ஒன்று என தான் கருவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Agarwal 1

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான மாயங்க் அகர்வால் துவக்க வீரராக சிறப்பாக விளையாடி உள்ளதால் நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரே துவக்க வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆனது ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement