விராட் கோலி இந்த வாய்ப்பையும் தவறவிட்டால் ரோஹித் கேப்டனாவதை யாராலும் தடுக்கமுடியாது – முன்னாள் வீரர் கருத்து

Rohith-1
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் ஐசிசி நடத்தும் தொடர்களில் அரை இறுதிப்போட்டி வரை முன்னேறி தோல்வி அடைவதை வாடிக்கையாக வைத்துள்ளது. அது தவிர தற்போது நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி அந்த இறுதிப் போட்டியிலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக அடைந்த தோல்வி பெரும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இதன்காரணமாக கோலியின் கேப்டன்ஷிப் மீது அழுத்தம் எழுந்துள்ளது.

IND

- Advertisement -

ஏற்கனவே ஐசிசி நடத்திய 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி, 2019 ஆம் ஆண்டு 50 உலகக் கோப்பை தொடர் என முக்கியமான போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக துவங்கி அரையிறுதிப் போட்டிகளில் வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அடுத்து வரும் t20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விராட் கோலி தலைமையில் தோல்வி அடைந்தால் நிச்சயம் அணியில் கேப்டன் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து தற்போது பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான தீப் தாஸ்குப்தா சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் தற்போது புதிய கேப்டனை நியமிப்பது என்பது சரியாக இருக்காது. ஏனெனில் உலக கோப்பை டி20 தொடருக்கு இன்னும் மூன்று நான்கு மாதங்களே உள்ளதால் அணியில் புதிய கேப்டனை நியமிக்கும் போது வீரர்கள் அவர்களது தலைமையில் விளையாட சற்று நேரம் பிடிக்கும்.

Rohith-1

எனவே தற்போது ஒரு கேப்டனை மாற்றுவதை விட விராத் கோலியே இந்த டி20 உலகக் கோப்பை தொடரிலும் கேப்டனாக செயல்பட வேண்டும். ஒருவேளை இந்த டி20 தொடரிலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சோபிக்க தவறினால் நிச்சயம் அவருக்கு அடுத்து ரோகித் சர்மா டி20 அணிக்கு கேப்டனாக கேப்டன் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் கோலிக்கு அடுத்தபடியாக இந்திய அணியை வழிநடத்தும் திறமை இவருக்கு தான் உள்ளது எனவும் தீப் தாஸ்குப்தா கூறியுள்ளார்.

Rohith

ஏற்கனவே ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவை டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது

Advertisement