இங்கிலாந்து தொடரில் இவரின் ஆட்டம் அசத்தலாக இருக்கும். பயப்பட வேணாம் – தீப்தாஸ் குப்தா சப்போர்ட்

Deepdas-gupta

இந்திய அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த தொடரானது ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி முதல் துவங்க உள்ள நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த பல வருடங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்துள்ளது.

அதுமட்டுமின்றி அணியில் புத்துயிர் ஊட்ட வேண்டும் என்ற காரணத்திற்காக சீனியர் வீரர்கள் சிலரை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ஒரு கருத்து பரவலாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ஆன ரகானே கடந்த சில தொடர்களாக ரன் குவிக்க திணறி வருவதாகவும் பந்தினை சற்று பயத்துடன் எதிர்கொள்ளும் கொள்வதாகவும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா ரகானேவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : 2015-16 ஆண்டுகளில் பார்த்த ரகானே தற்போது இல்லை. அப்போது அவர் விளையாடும் ஆட்டத்தை பார்த்து இருந்தால் 3-வது வீரராக களமிறங்கி 4000-4500 ஆயிரம் ரன்களை அடித்துள்ளார்.

Rahane 1

ஆனால் இப்பொழுது அவர் வேறு மாதிரி உள்ளது. இந்தியாவில் பேட்டிங் செய்யும்போது அவருடைய ஆட்டம் வேறு மாதிரி இருக்கலாம் ஆனால் வெளிநாடுகளுக்குச் சென்றால் அங்குள்ள தன்மைக்கு ஏற்றவாறு விளையாடுவதில் அவர் திறமைசாலி.

- Advertisement -

Rahane-3

நிச்சயம் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் நம்பிக்கையுடன் விளையாடி ரன்களை குவிப்பார். எனவே மிடில் ஆர்டரில் ரகானே நிச்சயம் இருக்க வேண்டும். அவரது ஆட்டம் குறித்து எந்தவித பயமும் வேண்டாம். இந்த தொடரில் அவர் தன்னுடைய திறனை நிச்சயம் நிரூபிப்பார் என தீப்தாஸ் குப்தா ஆதரவு தெரிவித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement