தோனியும் வேண்டாம். பண்ட்டும் வேண்டாம். இவரே கீப்பராக இருக்கட்டும் – தீப் தாஸ் குப்தா வெளிப்படை

Das
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான மகேந்திர சிங் தோனி இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் விளையாடாமல் இருக்கிறார். மேலும் ஆரம்ப காலத்தில் சிறிது ஓய்வினை கேட்ட தோனிக்கு பிறகு இந்திய அணி அடுத்தடுத்த தொடர்களில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டும் வந்தன. அவர் இந்திய அணிக்காக விளையாடி சுமார் 8 மாதங்களுக்கு மேலாகிறது. இதனால் தோனி மீண்டும் எப்போது விளையாட வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Dhoni

- Advertisement -

தோனி இந்திய அணிக்காக விளையாடி 8 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் வீரர்களின் ஒப்பந்த ஊதியப்பட்டியலில் இருந்தும் அவரது பெயர் நீக்கப்பட்டது. இதனால் அவர் மீண்டும் இந்திய அணியில் இணைவது கடினம் என்றே பலரும் தங்களது கருத்துக்களை கூறினர். இந்நிலையில் டோனிக்கு பதிலாக இந்திய நிர்வாகம் ரிஷப் பண்டை அடுத்த விக்கெட் கீப்பராக தயார்படுத்த நினைத்தது.

அதன் காரணமாக அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பினை அவர் பயன்படுத்த தவறிவிட்டார். மேலும் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பண்டிற்கு பதிலாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட வாய்ப்பு கிடைத்தது.

அந்த தொடரில் தனது சிறப்பான விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் திறமையை காண்பித்து அடுத்த நியூசிலாந்து தொடரிலும் விக்கெட் கீப்பராக தொடர்ந்தார். மேலும் அந்த தொடரில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். மேலும் விக்கெட் கீப்பிங்கிலும் ஓரளவு சிறப்பாக செயல்பட்டதால் கோலி இன்னும் சில காலத்திற்கு அணியில் ராகுலே விக்கெட் கீப்பராக இருப்பார் என்றும் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது டி20 அணிக்கு டோனிக்கு பதிலாக யாரை விக்கெட் கீப்பராக செயல்பட வைக்கலாம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான தீப் தாஸ் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : டி20 போட்டியில் என்னை பொருத்தவரைக்கும் கே.எல் ராகுல் விக்கெட் கீப்பராக டோனிக்கு பதிலாக செயல்படவேண்டும்.

Rahul

ஏனெனில் எப்படி கீப்பிங் செய்ய வேண்டும் மற்றும் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பது குறித்து ராகுல் தெளிவாக புரிந்து வைத்துள்ளார். மேலும் உள்ளூர் தொடரிலும், ஐபிஎல் தொடரிலும் முதன்மை விக்கெட் கீப்பராக ராகுல் செயல்படுவதால் அவரிடம் கீப்பிங் டெக்னிக் உள்ளது மேலும் அவர் கீப்பராக செயல்படும் பட்சத்தில் அணிக்கு மற்றொரு பேட்ஸ்மேனை சேர்க்கும் வாய்ப்பு கிடைப்பதால் டி20 அணிக்கு தோனிக்கு சரியான மாற்று வீரர் ராகுல் தான என்று அவர் தெரிவித்திருந்தார்.

Rahul

ஏற்கனவே இதே கருத்தை கேப்டன் கோலியும் தெரிவித்திருந்தார். அதாவது ராகுலை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக அணியில் சேர்க்கும்போது பின் வரிசையில் ஒரு பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பு கிடைக்கிறது இதனால் ராகுல் அணியில் விக்கெட் கீப்பராக தொடர்ந்து நீடிக்க வேண்டும் அவர் குறிப்பிட்டு இருந்ததார். ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த உலக கோப்பை அணியிலும் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படும் பட்சத்தில் பின்வரிசையில் பண்ட் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement