அவருக்கு கேப்டன் பதவி குடுத்தது ரொம்ப கரெக்ட். அவர்தான் நெக்ஸ்ட் கேப்டன் – தீப் தாஸ் குப்தா பாராட்டு

Deepdas-gupta
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. தற்போதைக்கு அரையிறுதி சுற்றினை நோக்கி முன்னேறிவரும் இந்திய அணி இறுதிப் போட்டியிலும் நுழைந்து கோப்பையை வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் பிராத்தித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த கையோடு ஆஸ்திரேலியாவிலிருந்து நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.

David Miller Hardik Pandya IND vs SA

- Advertisement -

இந்த நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி நேற்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யின் மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் வாய்ப்புக்காக காத்திருந்த பல இளம் வீரர்களுக்கு இந்த இரண்டு தொடர்களிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தீப் தாஸ் குப்தா தேர்வுக்குழுவினர் ஹார்திக் பாண்டியாவை டி20 அணியின் கேப்டனாக நியமிக்க நியமித்தது பாராட்ட வேண்டிய ஒன்று என்றும் அது சரியான ஒரு நியமனம் என்றும் தனது பாராட்டினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : பாண்டியா டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட முடிவு மிகச் சரியானது. ரோகித் சர்மாவிற்கு அடுத்து அவரால் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்த முடியும்.

அவரை கேப்டனாக நியமித்ததில் எனக்கு ஒரு ஆச்சரியமும் கிடையாது. ஏற்கனவே நான் பாண்டியா விரைவில் டி20 அணியின் கேப்டன் ஆவார் என்று எதிர்பார்த்த ஒன்றுதான். ஏனெனில் இந்திய அணி தற்போது அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிய நேரம் வந்துவிட்டது. அடுத்த உலக கோப்பையை கணக்கில் வைத்து சில மாற்றங்களை செய்தாக வேண்டும். அந்த வகையில் பாண்டியாவிற்கு இந்த பதவி வழங்கப்பட்டது சரியான நேரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா இப்போது கேப்டனாக இருந்தாலும் அடுத்த உலக கோப்பைக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

- Advertisement -

அந்த வகையில் பாண்டியா அடுத்த வருங்கால கேப்டன். இந்திய அணி எடுத்த இந்த முடிவு மிகச் சரியான ஒன்று. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் அவர் குஜராத் அணியை மிகச் சிறப்பாக வழி நடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார். எனவே அவரை கேப்டனாக நியமித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என தீப்தாஸ் குப்தா கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக காயம் காரணமாக பந்துவீச முடியாமல் இருந்து வந்த ஹார்டிக் பாண்டியா கடந்த ஐபிஎலின் போது மீண்டும் பந்து வீச துவங்கியதோடு மட்டுமின்றி ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இதையும் படிங்க : தங்கத்திலும் சொக்கத்தங்கம், சுமாரான பார்மில் தவிக்கும் ராகுல் பற்றி கோச் டிராவிட் சொல்வது என்ன?

அதோடு தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையிலும் பாண்டியா அசத்தி வருவதால் அவரிடம் கேப்டனுக்கான அனைத்து தகுதிகளும் உள்ளது என்றும் அவரது இந்த நியமனம் சரியான ஒன்று என்றும் ரசிகர்களும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement