இந்த வாய்ப்பையும் தவறவிட்டா தோனியோட கதை முடிஞ்சது. அப்புறம் எல்லாம் க்ளோஸ் – டீன் ஜோன்ஸ் எச்சரிக்கை

மகேந்திர சிங் தோனி இந்தியாவிற்காக கடந்த 15 வருடங்களாக விளையாடி வருபவர். தற்போது 39 வயதுடைய அவர் கிட்டத்தட்ட தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார்.வெகு சீக்கிரம் ஓய்வு பெற்று விடுவார் என்று தெரிகிறது. மேலும் அவரது ஓய்வு குறித்த செய்திகள் நாள்தோறும் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வருகின்றன.

Dhoni

ஆனால் தோனியோ எப்படியாவது மீண்டும் ஒருமுறை இந்திய அணிக்காக ஆடி விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார். இதனை அவரது நடவடிக்கையில் பார்க்க முடிகிறது. ஆனால் கடந்த ஒரு வருடமாக நடைபெற்ற எந்த ஒரு தொடரிலும் இந்தியாவிற்காக தனது பெயரைக் கூட பரிசீலிக்க சொல்லவில்லை அவர்.

இதன் காரணமாக தற்போது நடைபெற இருக்கும் ஐபிஎல் ஆடினால் மட்டுமே அந்த கனவு நிறைவேறும். ஓரளவிற்காவது நிலைத்து நிற்கவில்லை என்றால் அவ்வளவு தான் இந்திய அணியில் நிச்சயம் அவருக்கு இடம் கிடைக்காது. இதனை பல முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் கூறி வருகின்றனர்.

dhoni

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் மற்றும் வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ் இது குறித்து பேசியுள்ளார் . அவர் கூறுகையில்…. தோனி தற்போது அமைதியாக இருக்கிறார். ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் இந்தியா முன்னிலைப் படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் தோனி ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய அளவில் ஜொலித்தாள் மட்டுமே அவரது பெயர் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறும்.

- Advertisement -

Dhoni

ஐபிஎல் தொடர் தோனிக்கு கை கொடுக்கவில்லை என்றால் சர்வதேச கிரிக்கெட்டிற்கு கதவுகளை அடைத்துக் கொள்ள வேண்டியதுதான். இந்தியா எந்த விதத்திலும் அவருக்கு உதவிட முடியாது. தோனிக்கு இது ஒரு நல்ல ரெஸ்ட் எடுக்கும் நேரம் ஆக இருந்துள்ளது. அவர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்று கூறியுள்ளார் டீன் ஜோன்ஸ்.

.