உலகக்கோப்பை டி20 தொடரின் அரையிறுதிக்கு இந்த அணிகள் தான் தகுதி பெறும் – டீன் ஜோன்ஸ் கணிப்பு

கடந்த ஒரு மாதமாக இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் கிரிக்கெட் போட்டிகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து அணி வீரர்களும் தற்போது ஓய்வு கொடுக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கிரிக்கெட் வீரர்கள் அவர்களது இந்த ஓய்வு நேரத்தை வீட்டில் இருந்தபடி சமூக வலைதளங்களில் கழித்து வருகின்றனர்.

Cup

அதன்படி ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடர் குறித்து தனது கருத்தினை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதன்படி இந்த வருடம் எந்த அணி செமி பைனல் சுற்றுக்கு முன்னேறும் என்ற கருத்தினை அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக தற்போது பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் டி20 உலகக்கோப்பை சிறிய அளவில் பிரச்சனை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கொரோனா தாக்கம் மற்றும் உலகெங்கும் காட்டுக்குள் வந்தால் மட்டுமே இந்தத் தொடர் நடைபெற சாத்தியம் உள்ளது.

இல்லையெனில் இந்த தொடர் நடைபெறாமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது என்ற நிலையில் தற்போது இந்த தொடர் குறித்து பேட்டியளித்துள்ளார் டீன் ஜோன்ஸ். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்தியா ஆஸ்திரேலியா இங்கிலாந்து இந்த மூன்று அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் மேலும் நான்காவது அணியாக வெஸ்ட் இண்டீஸ் அல்லது பாகிஸ்தான் ஆகியவற்றில் ஒரு அணி நிச்சயம் அரையிறுதிப் போட்டியில் தகுதிபெறும்.

- Advertisement -

மேலும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய எந்த அணி பவுலிங்கில் சிறந்து விளங்குகிறதோ அந்த அணி மட்டுமே அரையிறுதிப் போட்டியில் உள்ளே வரும் மற்றபடி இந்தியா ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் செமி பைனல் நிச்சயம் முன்னேறும் ஏனெனில் இந்த மூன்று அணிகளும் சிறப்பான பந்து வீச்சாளர்கள் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

தற்போது இருக்கும் சூழ்நிலையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறாமல் போவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் இந்தியாவிலும் ஐபிஎல் தொடர் நடைபெறுவதும் தற்போது கேள்வி குறியாகி உள்ள நிலையில் தற்போது உலகக்கோப்பை டி20 தொடர் குறித்த செய்திகள் அதிக அளவில் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -