இந்திய அணியை சேர்ந்த இவரே தற்போதைய உலகின் சிறந்த பீல்டர் – டீன் ஜோன்ஸ் புகழாரம்

Jones-1

உலகம் முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் நிலைமை எப்போது கட்டுக்குள் வருகிறதோ அப்பொழுது தான் நாம் மீண்டும் கிரிக்கெட்டைப் பற்றி யோசிக்க முடியும். அந்த அளவிற்கு கொரோனா பாதிப்பினால் கிரிக்கெட் முடங்கியுள்ளது.

Corona-1

கிரிக்கெட் மட்டுமின்றி உலகின் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும், பொது நிகழ்ச்சிகள், அரசாங்க நிகழ்ச்சிகள் என அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது வீரர்கள் அனைவரும் தங்கள் வீட்டிற்குள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வையும் கொடுத்து வருகின்றனர்.

மேலும் இணையத்தின் வழியாக கிரிக்கெட் குறித்த பல கேள்விகளுக்கு பல முன்னாள் வீரர்களும் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ்-யிடம் ரசிகர்கள் பலரும் கிரிக்கெட் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.

அதில் உலகின் தலைசிறந்த பீல்டர் என்று நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள் ? என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளித்த டீன் ஜோன்ஸ் கூறுகையில் : தற்போது உள்ள வீரர்களில் நான் பீல்டிங்கில் சிறந்தவர் என நான் நினைப்பது இந்திய அணியை சேர்ந்த ஜடேஜாவை தான் என்று பதிலளித்துள்ளார்.

- Advertisement -

மேலும் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ்யும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஜடேஜா இந்திய அணிக்கு பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார். அவரது பேட்டிங் பந்துவீச்சு மட்டுமின்றி பீல்டிங்கில் அவர் சுறுசுறுப்பாக இருப்பார். மேலும் எந்தவிதமான கஷ்டமான கேட்சிகளை எடுப்பதிலும், ரன் அவுட்டுகளை செய்வதிலும் அவர் கில்லாடி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Jadeja-1

மேலும் ரோகித் சர்மா கூறுகையில் : இந்திய அணியின் அணுகு முறையை மாற்றி அமைத்து இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்து வருபவர் ரோகித்சர்மா என்றும் பெருமையாக கூறினார். மேலும் விராட் கோலி பற்றி பேசுகையில் வழக்கமாக எல்லோரும் கூறுவது போல ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்றார். அதே போன்று அவருக்கு போட்டியாக ஸ்டீவ் ஸ்மித் இருக்கிறார் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -