இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று மொகாலி மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
So how was that press conference, Quinton? ????#INDvSA pic.twitter.com/S6zdhBgSc8
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 17, 2019
இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டிகாக் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்த டிகாக் பேட்டி அளித்துக்கொண்டிருக்கும் போது பேட்டி முடிவடைந்தது நன்றி என்று டிகாக் பேசிக்கொண்டிருக்கும்போதே பத்திரிக்கையாளர்கள் கூறியதால் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு எனக்கு சலிப்பாக இருந்தது என்று கூறி அவர் வெளியேறினார்.
இந்த பிரெஸ்மீட் வீடியோ தற்போது வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கோவமே வராத அவரை கோவப்படுத்திடீங்களே என்று ரசிகர்கள் இந்த விடீயோவிற்கு கமெண்ட் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.