முதலிடத்தில் இருக்கும் டெல்லி அணிக்குள் இருக்கும் தீராத குழப்பம் – ஐக்கிய அமீரகத்தில் என்ன நடக்கும் ?

- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவில் துவங்கி நடைபெற்ற ஐபிஎல் தொடரானது முதல் கட்டப் போட்டிகள் சிறப்பாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட போட்டியின் போது வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா வைரஸ் காரணமாக 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்த தொடரானது பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் மீதமுள்ள 31 போட்டிகள் எப்போது எங்கு நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

IPL

- Advertisement -

இவ்வேளையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை எஞ்சியுள்ள ஐ.பி.எல் தொடர் நடை பெறுவது உறுதியாகி உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சென்றுவிட்டன.

மேலும் வருகிற 31ம் தேதி சன் ரைசர்ஸ் அணியும் ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்க உள்ளது. அதற்கு முன்னர் தற்போது டெல்லி அணியானது வரும் சனிக்கிழமை அமீரகம் பயணிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இப்படி அனைத்து அணிகளும் தங்களது பயணத்தை திட்டமிட்டு வரும் வேளையில் டெல்லி அணியும் பயணத்தை முடிவு செய்துள்ளது.

ஆனால் இந்த எஞ்சியுள்ள போட்டிகளில் டெல்லி அணிக்கு கேப்டனாக செயல்படுவது யார் ? என்ற முடிவினை தான் இன்னும் அந்த அணியின் நிர்வாகம் எடுக்காமல் குழப்பத்தில் உள்ளது. ஏனெனில் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது இங்கிலாந்து தொடரின் போது காயமடைந்த டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட முடியாத சூழ்நிலையில் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார்.

Iyer-1

அவரது தலைமையில் 8 போட்டிகளில் விளையாடிய டெல்லி அணியானது அதில் 6 வெற்றி பெற்று இந்த ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் தற்போது ஸ்ரேயாஸ் அய்யர் காயத்திலிருந்து குணமடைந்தது மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளதால் அவரை கேப்டன் ஆக்கலாமா ? அல்லது ரிஷப் பண்ட் கேப்டனாக தொடர்வாரா ? என்ற குழப்பத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement