இந்திய அணியை சமாளிக்க உலகின் நம்பர் வீரரை டெஸ்ட் அணிக்கு அழைத்த இங்கிலாந்து – விவரம் இதோ

Eng

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் முடிவில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதால் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்ற போவது எந்த அணி ? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

indvseng

அதேவேளையில் முதலாவது டெஸ்ட் போட்டியின் போது வெற்றி வாய்ப்பை இழந்த இந்திய அணி தனது 2-வது டெஸ்டில் அபாரமாக விளையாடி இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இந்நிலையில் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் பலரும் கூறி வருகின்றனர். அதனால் தற்போது இங்கிலாந்து அணி அணியில் சில மாற்றங்களை செய்யப்பட்டுள்ளன.

- Advertisement -

அதன்படி தற்போது 3வது டெஸ்ட் போட்டி வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 15 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் க்ரவ்லி மற்றும் சிப்லி ஆகியோரை வெளியேற்றிவிட்டு டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் வீரராக திகழும் டேவிட் மலானை அந்த அணி 15 பேர் கொண்ட அணியில் இணைத்துள்ளது. இங்கிலாந்து அணியின் டாப் 3 வீரர்கள் முதல் இரண்டு போட்டிகளிலும் சரியாக செயல்படாத வேளையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

malan

டேவிட் மலான் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வாறு விளையாடப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்த்தால் மட்டுமே தெரியும். அதேபோன்று மார்க் வுட் காயமடைந்து உள்ளதால் அவருக்கு பதிலாக சாகிப் முஹம்மத் மற்றும் ஓவர்டன் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி இதோ :

- Advertisement -

1) ஜோ ரூட் (கேப்டன்), 2) ரோரி பர்ன்ஸ், 3) ஹசிப் ஹமீது, 4) டேவிட் மலான், 5) ஜானி பேர்ஸ்டோ, 6) ஜாஸ் பட்லர், 7) ஒல்லி போப், 8) ஒல்லி ராபின்சன், 9) ஜேம்ஸ் ஆண்டர்சன், 10) சாம் கரன், 11) டேன் லாரன்ஸ், 12) சாஹிப் முகமத், 13) மொயின் அலி, 14) க்ரேக் ஓவர்டன், 15) மார்க் வுட்

Advertisement