இந்திய அணியில் இவரை மட்டும் சீண்டாதீங்க. நமக்கு தான் ஆபத்து – ஆஸி பவுலர்களை எச்சரித்த வார்னர்

Warner
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப்போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் ரசிகர்கள் காண காத்திருக்கின்றனர். கடந்த 4 மாதங்களாக எந்த ஒரு கிரிக்கெட் தொடரும் நடைபெறவில்லை. மேலும் இனி வரப்போகும் கிரிக்கெட்டிலும் ரசிகர்களில் உடன் நடைபெறுமா என்பதிலும் சந்தேகம் உள்ளது.

indvsaus

- Advertisement -

இந்நிலையில் இந்த கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள ஓய்வு நேரத்தை கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது மற்றும் கிரிக்கெட் குறித்த தங்களது அனுபவங்களை பகிர்வது என பிஸியாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான வார்னர் இந்திய ஆஸ்திரேலிய தொடர் குறித்து சில விவரங்களையும், அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அதன்படி கடந்த முறை ஆஸ்திரேலிய சென்ற இந்திய அணி 71 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. விராட்கோலி தலைமையிலான அதே இந்திய அணி மீண்டும் வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா புறப்படுகிறது. சென்றமுறை இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி பொதுவான வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் தடை காரணமாக அணியில் இல்லை.

warnersmith

ஆனால் தற்போது மீண்டும் அவர்கள் அணிக்கு திரும்பி இருப்பதால் இம்முறை போட்டி பலமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இது குறித்து பேசிய வார்னர் கூறுகையில் : ஆஸ்திரேலிய அணியில் நான் களத்தில் ஆக்ரோஷமாக இருப்பவன். எதிரிகள் என்னை சீண்டினால் கூடுதல் பலத்துடன் எழுந்து தனது எனது பேட்டிங்கால் பதில் கொடுப்பேன்.

- Advertisement -

மேலும் ரசிகர்கள் என்னை உற்சாகப்படுத்தினால் நான் இன்னும் சிறப்பாக விளையாட தயாராக வேன். அதேபோன்றுதான் கோலியும் ரசிகர்கள் அவருக்கு மைதானத்தில் ஆரவாரம் கொடுத்தால் அவர் மிகவும் உற்சாகம் அடைவார். அதுமட்டுமின்றி மைதானத்தில் யாரேனும் கோலியை சீண்டினால் உடனே போருக்கு தயாராகி விடுவார். அந்த அளவுக்கு எதிரணியின் மீது அழுத்தம் கொடுத்தும் வீரராக விளங்குகிறார்.

Kohli-1

கோலியை சீண்டினால் அவர் மிகுந்த பலத்தோடு சிறப்பாக விளையாடுவார் அதை நாம் பலமுறை பார்த்துள்ளோம். அதனால் அவரை சீண்டுவதற்கு எந்த தேவையும் இல்லை. அவ்வாறு அவரை சீண்டினால் அந்த நாளின் முடிவில் அது நமக்கே ஆபத்தாக முடியும் என்று ஆஸ்திரேலிய பவுலர்களை அவர் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement