டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் : அஷ்வின் கூட இவரும் விளையாடனும். அதுதான் டீமுக்கு பலம் – டேவிட் வார்னர் பேட்டி

Warner
- Advertisement -

இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளதால் இந்த போட்டியின் மீதான கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் மிக முக்கியமான ஒரு வீரருக்கு இந்த இறுதிப் போட்டியில் விளையாட இந்திய அணயில் இடம் கிடைக்குமா ? கிடைக்காதா ? என்ற கவலையில் ஆழ்ந்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரானா டேவிட் வார்னர்.

INDvsNZ

- Advertisement -

வருகிற 18ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. போட்டி நடைபெறும் மைதானம் வேகப் பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் இந்திய அணியானது நான்கு வேகப் பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணிக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். ஒருவேளை இந்திய அணியானது நான்கு வேகப் பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினால், ரவீந்திர ஜடேஜாவுக்கு விளையாடும் அணியில் வாய்ப்பு மறுக்கப்படும் எனத் தெரிகிறது.

இது குறித்துதான் தற்போது கருத்து தெரிவித்துள்ளார் டேவிட் வாரனர். அதில் ஜடேஜாவைப் புகழ்ந்து பேசிய அவர் கூறியிருப்பதாவது, இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக எப்போதும் ரவீந்திர ஜடேஜா சிறப்பாகவே பந்து வீசி வந்திருக்கிறார். மைதானத்தில் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஒரு சிறிய பெட்டி அளவிலான இடம் கிடைத்தாலும், அந்த இடத்தை குறி வைத்து தொடர்ச்சியாக அவரால் பந்து வீச இயலும்.

jadeja 1

என்னைப் பொறுத்தவரை ஜடேஜா மற்றும் அஷ்வின் என இரண்டு ஸ்பின்னர்களுமே நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களை தடுமாற வைப்பார்கள் என்று அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியானது ஒரு ஸ்பின்னருடன் களமிறங்க நினைத்தால், அந்த இடமானது ஜடேஜாவிற்கு அல்லாமல் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு தான் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

jadeja

இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பந்து வீசியிருக்கும் அவர், இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் ரவீந்திர ஜடேஜவும் பௌலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இந்திய அணி எந்த மாதிரியான முடிவை எடுக்கப்போகிறது என்பது வருகிற 18ஆம் தேதியன்று தெரிந்துவிடும்.

Advertisement