CSK vs DC : நாங்க செய்ஞ்ச இந்த தப்பு தான் சி.எஸ்.கே அணிக்கெதிரான தோல்விக்கு காரணம் – டேவிட் வார்னர் வருத்தம்

David-Warner
- Advertisement -

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 55-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணியானது 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றி பெற்றதோடு புள்ளி பட்டியலிலும் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

CSK vs DC

- Advertisement -

அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்தது. பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் எட்டு விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதன் காரணமாக சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில் : அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது தான் எங்களது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கிறேன்.

Warner

குறிப்பாக முதல் ஓவரிலேயே என்னுடைய விக்கெட்டை இழந்து விட்டேன். எங்கள் அணியின் துவக்க ஜோடி மிகவும் முக்கியமான ஒன்று ஆனால் நாங்கள் துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து விட்டோம். அதிலும் மிட்சல் மார்ஷ் ரன் அவுட் ஆகிவிட்டார். இப்படி மூன்று விக்கெட்டுகளுமே எளிதாக வீழ்ந்தது. நாங்கள் விக்கெட்டுகளை அவர்களிடம் பறிகொடுத்து விட்டோம் என்றே கூற வேண்டும்.

- Advertisement -

இப்படி துவக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்ததால் நாங்களே எங்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டோம். நிச்சயம் 168 என்கிற இலக்கு எட்டக்கூடிய ஒன்றுதான். ஆனால் அதற்கு முதல் ஆறு ஓவர்கள் நாங்கள் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும் முதல் ஆறு ஓவரிலேயே நாங்கள் விக்கெட்டுகளை இழந்து விட்டதால் மிடில் ஓவர்களின் எங்களால் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்ய முடியவில்லை.

இதையும் படிங்க : IPL 2023 : அவ்ளோ தான் இனிமேல் வண்டி அதிரடியா ஓடாது, முக்கிய நேரத்தில் சொதப்பும் சிஎஸ்கே நட்சத்திர வீரர் – ரசிகர்கள் ஏமாற்றம்

இந்த தோல்வியிலிருந்து நிறைய விடயங்களை கற்றுக் கொண்டுள்ளோம். இனிவரும் போட்டிகளில் புதிதாக சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த போட்டியில் தோல்வியடைந்தது வருத்தம் அளிக்கிறது என்றும் வார்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement