இந்தியா ஆஸ்திரேலியா தொடர் : மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து முக்கிய வீரர் விலகல் – அதிகாரபூர்வ தகவல்

indvsaus
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா விதிமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டு முறையாக துவங்கிய இத்தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை எளிதில் வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.

indvsaus

- Advertisement -

மேலும் இத்தொடரின் கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 2 ஆம் தேதி கான்பெர்ரா மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் கையே ஓங்கி உள்ளது என்றால் அது மிகை அல்ல. ஏனெனில் ஒட்டுமொத்தமாக பேட்டிங், பவுலிங், பீல்டிங் என ஆஸ்திரேலிய அணி தற்போது உச்சத்தில் இருக்கிறது. இந்திய அணியை பொறுத்தவரை சிறப்பான பந்து வீச்சாளர்களை வைத்திருந்தாலும் திறம்பட செயல்படவில்லை.

இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர்கொண்டு ரன்களை குவித்து வருகின்றனர். மேலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஓரளவு சிறப்பாக விளையாடினாலும் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கும் பெரிய இலக்குகளை இந்திய அணியால் வெற்றிகரமாக சேசிங் செய்ய முடியவில்லை. மேலும் நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி 350 ரன்களுக்கு மேல் குவித்தது.

warner

இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் குவித்தாலும் வெற்றியை எட்டக்கூடிய அளவிற்கு விளையாட முடியவில்லை. இதனால் மூன்றாவது போட்டியின் மீது எதிர்பார்ப்பு குறைந்துவிட்டது என்றாலும் இந்த போட்டியில் ஜெயித்து இந்திய அணி கௌரவத்துடன் தொடரை முடிக்க எதிர்பார்க்கும். இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு சிக்கல் ஏற்படும் வகையில் அந்த அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த தொடரின் முதல் போட்டியில் 69 ரன்களும், இரண்டாவது போட்டியில் 83 ரன்கள் குவித்து அதிரடி காண்பித்த வார்னர் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். இந்நிலையில் இரண்டாவது போட்டியில் பீல்டிங் செய்யும் போது ஏற்பட்ட காயம் காரணமாக வார்னர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

warner 1

அதுமட்டுமின்றி காயத்திற்கான பரிசோதனையின் முடிவில் அவரின் காயத்தின் தன்மை அதிகமாக உள்ளதன் காரணமாக அவர் மூன்றாவது ஒருநாள் போட்டி மட்டுமின்றி, டி20 தொடரில் இருந்தும் முற்றிலுமாக வெளியேறி உள்ளார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement