டேவிட் வார்னர் தேர்வுசெய்த சிறந்த ஐ.பி.எல் வீரர்களை கொண்ட லெவன் அணி இதோ – கேப்டன் யார் தெரியுமா ?

Warner
- Advertisement -

இந்தியாவில் தற்போது வரை 12 ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரில் பல தலைசிறந்த சர்வதேச வீரர்கள் ஆடியுள்ளனர். சச்சின் டெண்டுல்கர், முத்தையா முரளிதரன் போன்ற பழம்பெரும் ஜாம்பவான்களும் ரஷீத் கான், விராட் கோலி, ரோஹித் சர்மா, மகேந்திர சிங் தோனி போன்ற இந்த கால ஜாம்பவான்களும் ஆடியுள்ளனர்.

Ipl cup

- Advertisement -

2008 ஆம் ஆண்டு துவங்கிய இந்த ஐ.பி.எல் ரசிகர்களின் தொடர் ஆதரவினால் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதுவரை 12 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் இந்தாண்டு நடைபெற இருந்த 13 ஆவது சீசன் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக ஓய்வில் இருக்கும் வீரர்கள் தங்களின் கிரிக்கெட் குறித்த அனுபவங்களையும், தங்களுக்கு பிடித்த வீரர்களை கொண்டு சிறந்த அணியை தேர்வுசெய்து வருகின்றனர். அந்தவகையில் பலரும் பலநாட்டு வீரர்களை கொண்டு அணியை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அதிகம் விளையாடுவார்கள்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களை வைத்து ஒரு மிகச்சிறந்த ஐபிஎல் அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அணியில் : டேவிட் வார்னர் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குகின்றனர்.

- Advertisement -

பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி மூன்றாவது இடத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா நான்காவது இடத்தையும் ஆக்கிரமிக்கின்றனர்.ஆல் ரவுண்டர்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்டியா மற்றும் கிளன் மேக்ஸ்வெல் வருகின்றனர்.

Dhoni

கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மகேந்திர சிங் தோனியை நியமித்துள்ளார் அவர். வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ஜஸ்பிரித் பும்ரா, இந்தியாவின் முன்னாள் வீரர் ஆசிஸ் நெஹரா ஆகியோரும் சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

1) டேவிட் வார்னர், 2) ரோஹித் சர்மா, 3) விராட் கோலி, 4) சுரேஷ் ரெய்னா, 5) ஹார்டிக் பாண்ட்யா, 6) க்ளென் மேக்ஸ்வெல், 7) எம்.எஸ்.தோனி, 8) மிட்செல் ஸ்டார்க், 9) ஜஸ்பிரீத் பும்ரா, 10) ஆஷிஷ் நெஹ்ரா, 11) குல்தீப் யாதவ் / யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement