சிட்னி மைதானத்திலும் இந்திய ரசிகர்களின் வேண்டுகோளுக்காக “புட்ட பொம்மா” டேன்ஸ் ஆடிய வார்னர்

Warner
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்த தொடரானது இன்று காலை இந்திய நேரப்படி 9.10 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் வெற்றியுடன் துவங்க இந்திய அணியும், இந்திய அணியை பழிதீர்க்க ஆஸ்திரேலிய அணியும் பல பரிட்சை நடத்தின. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் இந்திய பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு 76 பந்துகளில் 69 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். மேலும் முதல் விக்கெட்டுக்கு பின்சுடன் சேர்ந்து 156 ரன்களை குவித்து இந்த ஜோடி குவித்து அசத்தியது.

- Advertisement -

மேலும் 374 ரன்களை குவித்து 375 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. அதன் பின்னர் இந்திய அணி பேட்டிங் செய்யும்போது டேவிட் வார்னர் பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பவுண்டரி லைனில் இருந்த இந்திய ரசிகர்கள் டேவிட் வார்னர் நோக்கி “புட்டபொம்மா” பாடலுக்கு நடனமாடி தங்களது வேண்டுகோளை வைத்தனர்.

அதனை கேட்ட டேவிட் வார்னரும் சற்று வருத்தம் இன்றி மகிழ்ச்சியோடு அவர்களுக்காக மைதானத்திலேயே “புட்டபொம்மா” பாடலுக்கு நடனமாடிய படி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனை ரசிகர்களும் பெரிதளவு ரசித்தனர். மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக கேப்டனாக விளையாடி வரும் வார்னர் தெலுங்கு பாடலான “புட்டபொம்மா” பாடலுக்கு ஏற்கனவே தனது குடும்பத்தாருடன் நடனமாடி “டிக் டாக்” வீடியோ வெளியிட்டது இணையத்தில் ட்ரெண்டிங் ஆனது. அதனை தொடர்ந்து எங்கு சென்றாலும் அவரை நோக்கி இந்த “புட்டபொம்மா” பாடலுக்கு நடனம் ஆட ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement