கொரோனா வைரஸ் பீதி. ஐ.பி.எல் தொடர் நடைபெற்றால் இதுவே என் முடிவு – வார்னர் வெளியிட்ட அதிரடி முடிவு

warner
- Advertisement -

இந்தியாவில் 2020 ஆம் ஆண்டுக்கான 13 ஆவது ஐபிஎல் சீசன் மார்ச் மாதம் 29ஆம் தேதி தொடங்குவதாக ஏற்கனவே அட்டவணையை வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பீதியால் இந்த தொடர் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Ipl cup

- Advertisement -

மேலும் அதன் பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்தால் மட்டுமே இந்த தொடரை நடத்த முடியும் என்றும் இல்லையென்றால் தொடரை ரத்து செய்யவும் பி.சி.சி.ஐ தரப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. மேலும் உலகம் முழுவதும் எந்த ஒரு கிரிக்கெட் தொடரும் தற்போது நடைபெறவில்லை.

இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களது நாட்டிற்கு திரும்பிச் சென்று வீட்டிற்குள் இருக்கின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக எந்த ஒரு போட்டியும் நடைபெறாத நிலையில் ஐபிஎல் தொடரை ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் தூங்குவது குறித்து அனைத்து கட்ட முயற்சிகளும் எடுக்கப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

warner

இந்நிலையில் ஐபிஎல் போட்டி நடைபெற்றால் அதில் பங்கேற்பாரா என்பது குறித்து டேவிட் வார்னர் தரப்பிலிருந்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவரது மேனேஜர் கூறுகையில் : பிசிசிஐ இந்த சீசனை நடத்துவதில் உறுதியாக இருந்தால் வார்னர் எந்தவித சிக்கலும் இன்றி கண்டிப்பாக இந்த தொடரில் பங்கேற்று விளையாடுவார் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதற்கிடையில் ஆஸ்திரேலிய அரசு நான்காம் நிலை பயண தடையை விதித்துள்ளது. நான்காம் நிலை என்பது எந்த ஒரு நபரும் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என்பதுதான் ஒருவேளை பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் டேவிட் வார்னர் பங்கேற்பார். விஷயங்கள் எப்பொழுதும் வியக்கத்தக்க வகையில் மாறும். அந்த வகையில் சில மணி நேர இடைவெளி போதுமானது என்று வார்னரின் மேனேஜர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் வார்னர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டியில் விளையாட 17 ஆஸ்திரேலிய வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ், ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் போன்றோர் முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement