வேற யாரு இருக்காங்க ? தற்போதைய கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் இவர்தான் – மில்லர் புகழாரம்

Miller

தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் மில்லர் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 134 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3331 ரன்களையும், 81 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1525 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி வீரரான இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் 86 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

miller 1

கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த டேவிட் மில்லர் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நடைபெற்று முடிந்த 14வது ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 88 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 62 ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

சமீபகாலத்தில் இவரது அதிரடி பெரும்பாலும் காணப்படவில்லை என்றாலும் முக்கியமான நேரங்களில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டு வீரர்கள் அனைவரும் ஓய்வில் இருக்கும் நேரத்தில் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக ரசிகர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்து வருகிறார்.

miller

அந்த வகையில் தற்போது டேவிட் மில்லரிடம் ரசிகர்கள் பல்வேறு வகையான கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். இந்த கேள்விகள் அடங்கிய தொகுப்பில் ஒரு இந்திய ரசிகர் ஒருவர் உங்களது பேவரைட் பேட்ஸ்மேன் யார் என்று கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த டேவிட் மில்லர் வேறு யாருமில்லை விராட் கோலி தான் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வாயிலாக பதிலளித்துள்ளார்.

- Advertisement -

அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரும் 18ம் தேதி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement