- Advertisement -
உலக கிரிக்கெட்

வேதனையை சொல்ல வார்த்தையே இல்ல.. இதற்கிடையே ஓய்வு வேறயா? ரெடியா இருக்கேன்.. மில்லர் அறிவிப்பு

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்துள்ளது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பை வென்ற இந்தியா 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தோல்விகளையும் நிறுத்தியுள்ளது. அதனால் ஒட்டுமொத்த இந்திய மக்களும் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் ஆழ்ந்தனர்.

ஆனால் மாபெரும் இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்கா சோகத்தில் ஆழ்ந்தது. பார்படாஸ் நகரில் ஜூன் 29ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் இந்தியா 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு டீ காக் 39, க்ளாஸென் 52, டேவிட் மில்லர் 21 ரன்கள் அடித்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்தனர்.

- Advertisement -

மில்லர் அறிவிப்பு:
ஆனால் கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது பும்ரா, அர்ஷ்தீப், பாண்டியா ஆகியோர் சிறப்பாக பந்து வீசி தென்னாபிரிக்காவை மடக்கிப் பிடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். குறிப்பாக ஃபினிஷிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மில்லர் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது சூரியகுமாரின் அபாரமான கேட்ச்சால் அவுட்டானது தென்னாப்பிரிக்காவுக்கு தோல்வியை கொடுத்தது.

அதனால் சரித்திர வெற்றியை பெற்ற இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதே போல தென்னாபிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றதாக நேற்று செய்திகள் வெளியானது. இந்நிலையில் அதை மறுத்துள்ள டேவிட் மில்லர் இனிமேல் தான் ஆட்டம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

அதே சமயம் இந்தியாவிடம் சந்தித்த தோல்வியின் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என்று கூறும் அவர் இது பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “நான் குலைந்து விட்டேன். 2 நாட்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை விழுங்குவது மிகவும் கடினமான மாத்திரை. நான் எப்படி உணர்கிறேன் என்பதை சொல்ல வார்த்தைகள் இல்லை. இருப்பினும் எங்கள் எங்கள் அணியை நினைத்து பெருமைப்படுகிறேன்”

இதையும் படிங்க: எல்லாரோட ஆக்ஸிஜன் வேணும்.. ஃபைனலுக்கு முன் இந்திய வீரர்களுக்கு ரோஹித் கூறிய மெசேஜை பகிர்ந்த சூர்யகுமார்

“இந்தப் பயணம் நம்ப முடியாத ஒன்றாக இருந்தது. மாதம் முழுவதும் உயர்வும் தாழ்வும் இருந்தது. நாங்கள் வலியை சகித்துக் கொண்டோம். ஆனால் இங்கிருந்து முன்னேறி இந்த அணி உயரும் என்பது எனக்குத் தெரியும். சில அறிக்கைகளுக்கு மாறாக நான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை. தென்னாபிரிக்காவுக்காக விளையாட நான் எப்போதும் தொடர்ந்து இருப்பேன். சிறந்தது இனிமேல் தான் வரும்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -