3 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இணைந்த உலகின் நம்பர் 1 வீரர் – விவரம் இதோ

Root
- Advertisement -

இந்திய அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி அவர்களது சொந்த மண்ணில் பெரிய சறுக்கலை சந்தித்துள்ளது. ஏனெனில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கடைசி நாளில் எளிதாக வெற்றி பெறவேண்டிய நிலையில் மழை காரணமாக போட்டியில் டிராவில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் நிச்சயம் ஐந்தாவது நாளில் தோல்வியடையும் என்று எதிர்பார்த்த வேளையில் அனைவரும் எதிர்பாராதவிதமாக ஐந்தாவது நாளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியும் பெற்றது.

indvseng

- Advertisement -

இதன் காரணமாக இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. அதுமட்டுமின்றி மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெறும் என்று அனைவரும் கூறிவருகின்றனர். இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் அவ்வப்போது பல மாற்றங்களை நிகழ்த்தி வரும் இங்கிலாந்து அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் மேலும் ஒரு மாற்றத்தை செய்துள்ளது.

அதன்படி இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராக விளையாடி வந்த டோம்னிக் சிப்லி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததன் காரணமாக தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மாற்று வீரராக டி20 தரவரிசை பட்டியலில் உலகின் நம்பர் 1 வீரரான டேவிட் மலான் சேர்க்கப்பட்டுள்ளார்.

malan

ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ள டேவிட் மலான் அதன் பிறகு மூன்று ஆண்டுகளாக இங்கிலாந்து அணியின் டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இந்த மூன்றாவது டெஸ்டில் அவர் மீண்டும் இடம் பிடித்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அவரது இந்த சேர்க்கை குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் கூறுகையில் : டேவிட் மலான் எங்கள் அணியின் பேட்டிங் ஆர்டரில் மேலும் பலத்தை சேர்ப்பார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் நல்ல அனுபவம் பெற்ற வீரர் என்பதால் நிச்சயம் டெஸ்ட் போட்டியிலும் அவரது வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி எங்கள் அனைத்து நல்லதொரு பங்களிப்பை அளிப்பார் என நம்புகிறேன் என்று ஜோ ரூட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement