3 ஆவது போட்டியில் விராட் கோலியை விளையாட விடக்கூடாது – கடுமையாக பேசிய இங்கிலாந்து முன்னாள் வீரர்

ashwin 2
- Advertisement -

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. 3-வது நாள் ஆட்டத்தில் கடைசி ஓவரை அக்சார் பட்டேல் வீசினார். ஜோ ரூட் அதை எதிர்கொண்டார். பந்து ஜோ ரூட் கால் பேடில் பட்டு சென்றது. இந்திய வீரர்கள் எல்.பி.டபிள்யூ அப்பீல் கேட்டனர். ஆனால் நடுவர் விக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார்.இதனையடுத்து இந்தியா முடிவை ரீவ்யுூ செய்தது. ஆனால் ரீ-பிளே-யில் அம்பயர்ஸ் கால் என வந்தது. இதனால் இந்திய அணி கேப்டன் விராட் கோலி நடுவர் நிதின் மேனனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

axar 1

- Advertisement -

அவர் அவுட் கொடுத்தால் அவுட், அவுட் இல்லை என்றால் அவுட் இல்லை என்ற கணக்கில் கேப்டன் செல்ல வேண்டும் , அதுவே ஒர நல்ல கிரிக்கெட் வீரருக்கான அடையாளமாகும். இந்நிலையில் விராட் கோலியின் இச்செயலை விமர்சனம் செய்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேவிட் லாயிட், விராட் கோலியை 3-வது டெஸ்டில் விளையாட அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டேவிட் லாயிட் கூறுகையில் ‘‘விராட் கோலிக்கு எதிராக எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான வார்த்தைகள் இல்லையா? இதனால் நான் விரக்தியடைகிறேன். கிரிக்கெட் மிகவும் பழமையானது மற்றும் பாரம்பரியமானது. ஒரு அணியின் கேப்டன் நடுவரை விமர்சனம் புரிவது, கேலி செய்வது, துன்புறுத்தும் விததத்தில் நடந்து கொள்வது மற்றும் மிரட்டவும் அனுமதிக்கப்படக்கூடாது.

Kohli

ஆனால் அப்படி செய்த கோலி தொடர்ந்து 2-வது டெஸ்டில் விளையாட அனுமதிக்கப்படுகிறார். இதுமட்டும் வேறொரு போட்டியாக இருந்தால், விராட் கோலி மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பார். எனவே கோலியை அகமதாபாத் 3-வது டெஸ்டில் விளையாட அனுமதிக்கக் கூடாது’’ என்று கூறியுள்ளார்.

Advertisement