- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதை செய்ய ரெடியா இல்லாத.. இந்தியாவுக்கு டி20 உலக கோப்பையில் ஏமாற்றமே கிடைக்கும்.. டேவிட் லாய்ட் கணிப்பு

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் கோலாகலமாக துவங்கி நடைபெற உள்ளது. அதில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ரிங்கு சிங், தமிழக வீரர் நடராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்படாதது முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மற்றபடி ரோஹித் சர்மா, தலைமையில் விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஜடேஜா, ஜெய்ஸ்வால், சிவம் துபே ஆகிய அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் தேர்வாகியுள்ளனர். எனவே 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு டி20 உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது. அந்தத் தொடரில் வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தோல்வியை இந்தியா நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் காணப்படுகிறது.

- Advertisement -

ஸ்வாரஸ்யம் இல்ல:
இந்நிலையில் உலகக் கோப்பைக்காக தேர்வான இந்திய அணி சுவாரசியம் இல்லாமல் எளிதாக கணிக்கக் கூடியதாக இருப்பதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் லாய்ட் கூறியுள்ளார். எனவே 2023 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்றது போன்ற அபார தருணங்களை இந்தியா நிகழ்த்தும் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் கோப்பையை வெல்லும் அளவுக்கு இந்தியா அச்சுறுத்தலை கொடுக்கக்கூடிய அணியாக இல்லை என்று அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் டால்க் ஸ்போர்ட்ஸில் பேசியது பின்வருமாறு. “அது கணிக்கக்கூடிய அணியாகும். இந்திய அணியின் தரத்தை எதிரணியினர் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். ஆம் அவர்கள் நல்ல வீரர்கள். ஆனால் அவர்கள் பேட்டிங் அல்லது பந்து வீச்சில் ரிஸ்க் எடுத்து விளையாட தயாராக இல்லை. எனவே ஆம் அவர்கள் அவர்களுடைய தருணங்களை பெறுவார்கள்”

- Advertisement -

“ஆனால் அவர்கள் எதிரணிக்கு அச்சுறுத்தலை கொடுப்பவர்களாக இல்லை” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் துணை கேப்டனாக தேர்வாகியுள்ள ஹர்திக் பாண்டியா சுமாரான ஃபார்மில் இருப்பது ரசிகர்களுக்கு கவலையை கொடுப்பதாக இருக்கிறது. அதே போல கேப்டன் ரோஹித் சர்மாவும் கொஞ்சம் தடுமாற்றமான ஃபார்மில் இருக்கிறார்.

இதையும் படிங்க: பேங்க் பேலன்ஸ் கொடுக்கும் ஆர்சிபி ஏமாளியா? அதெப்டி ஐபிஎல்’ல மட்டும் சொதப்புறீங்க.. மனோஜ் திவாரி விளாசல்

இருப்பினும் விராட் கோலி, பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். எனவே முடிந்தளவுக்கு சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்வதற்கு இந்தியா போராடும் என்று உறுதியாக நம்பலாம். சொல்லப்போனால் ஐசிசி நாக் அவுட் போட்டிகளின் சோக்கர் என்ற எதிரணி கிண்டல்களை உடைப்பதற்காகவே இம்முறை இந்திய அணி வெறித்தனமாக விளையாடும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -