விராட் கோலி தொடர்ந்து அம்பயர்களிடம் தவறாக நடந்து கொள்கிறார் – டேவிட் லாயிட் குற்றச்சாட்டு

Lloyd
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் கடந்த ஆகஸ்டு 25ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-0 என்ற கனககில் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 78 ரன்களை மட்டுமே குவித்து பரிதாப நிலைக்கு சென்றது.

- Advertisement -

அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணியானது 432 ரன்களை குவித்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி நிச்சயம் தோல்வியை தவிர்க்க முடியாது என்றே தெரிகிறது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்த போட்டியில் அம்பயர்களிடம் நடந்து கொள்ளும் விதம் சரியானது அல்ல என முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் லாயிடு தனது கருத்தினைத் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் நாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அம்பயர்களிடம் தொடர்ந்து ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தார். ஒரு பெரிய வீரராக அவர் செய்யும் இதுபோன்ற செயல்கள் சரியானது கிடையாது.

kohli umpire 1

களத்தில் இருக்கும் அம்பயர்களிடம் தொடர்ச்சியாக விராட் கோலி இதேபோன்று கேள்விகளை எழுப்புவது எனக்கு சற்று ஏமாற்றமாக உள்ளது என்று டேவிட் லாயிடு கூறியுள்ளார். இந்த போட்டியின் முதல் இன்னிங்சின் போது இஷாந்த் சர்மா முதல் ஸ்பெல்லை சிறப்பாக வீசினார். அப்போது சில பந்துகளை அவர் வொயிடாகவும் வீசினார். அப்போது அந்த பந்துகளுக்கு அம்பயர்கள் வொயிடு கொடுக்கும் போது ஸ்லிப்பில் இருந்து கோலி தனது அதிர்ச்சியை அவர்களிடம் வெளிக்காட்டினார்.

kohli umpire

விராட் கோலி போன்ற ஒரு சிறப்பான பிளேயர் இதுபோன்று அம்பயர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக கேள்வி எழுப்புவது தவறான ஒன்று. அதேபோன்று இந்திய பவுலர்கள் சில தவறுகளை செய்யும் போதெல்லாம் அம்பயரை நோக்கி கோலி தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகிறார் இதனை அவர் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் டேவிட் லாயிடு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement