தோனியை பத்தியா பேசுற. முன்னாள் இங்கிலாந்து ஜாம்பவானை வெளுத்துவாங்கும் தோனி ரசிகர்கள் – விவரம் இதோ

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய தோனி இந்த இரண்டு மாத ஓய்வினை பேராஷூட் ரெஜிமன்ட் பிரிவில் பயிற்சி பெற முடிவு செய்திருந்தார். அதன்படி இந்திய ராணுவத்தின் பேராஷூட் ரெஜிமென்டில் பயிற்சி பெற தோனி அனுமதி கேட்டு இருந்தார்.

Dhoni 1

- Advertisement -

தற்போது தோனிக்கு ராணுவத்தளபதி பிபின் ராவத் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால் தோனி துணை ராணுவப்படையுடன் சேர்ந்து பயிற்சி எடுக்க ராணுவ தளபதி அனுமதி வழங்கியுள்ளார். மேலும், மற்றபடி ராணுவ நடவடிக்கைகளில் பங்குபெற தோனிக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான டேவிட் லாயிட் தோனி ராணுவத்தில் பயிற்சி பெற உள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்க வில்லை என்று வெளியான செய்தி கீழே இரண்டு சிரிக்கும் எமோஜிக்களை பதிவு செய்து கிண்டல் செய்தார். இதோ அந்த ட்வீட் :

இதனைக் கண்ட தோனியின் ரசிகர்கள் மிகுந்த கோபம் அடைந்தனர். அது எப்படி தோனியை அவமானப்படுத்தும் வகையில் சிரிக்கும் எமோஜிக்களை பதிவிடலாம். 9 டெஸ்ட் மற்றும் 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய உங்களுக்கும், 90 டெஸ்ட் மற்றும் 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் தோனிக்கும் வித்தியாசம் உண்டு புரிந்துகொள்ளுங்கள். மரியாதை கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை விலகி இருங்கள் என்று அவரை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement