- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs SL : இந்திய அணிக்கு எதிரான இந்த தோல்விக்கு காரணமே இதுதான் – இலங்கை கேப்டன் ஷனகா பேட்டி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணியிடம் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்துள்ளது.

ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த வேளையில் நேற்று தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான இரண்டாவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இலங்கை அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்கிற கணக்கில் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 215 ரன்கள் மட்டுமே குவித்தது.

அடுத்ததாக விளையாடிய இந்திய அணி 43.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 219 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறுகையில் : நாங்கள் போதுமான அளவு ரன்களை இந்த போட்டியில் குவிக்கவில்லை.

- Advertisement -

எங்களது அணி சிறப்பான துவக்கத்தை பெற்றிருந்தாலும் அதன்பிறகு மிடில் ஓவர்களில் தடுமாற்றத்தை சந்தித்து விட்டோம். இந்த கொல்கத்தா மைதானத்தில் 300 ரன்களுக்கு மேல் குவித்திருக்க வேண்டும். ஆனால் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் மிடில் ஓவர்களில் அற்புதமாக பந்துவீசி அசத்தி விட்டார். எங்களது அணியின் பேட்ஸ்மேன்களும் கிடைத்த துவக்கத்தை பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டனர்.

இதையும் படிங்க : IND vs SL : அவரோட இந்த பார்ம் இந்திய அணிக்கு மிகப்பெரிய ஸ்ட்ரென்த் – வெற்றி குறித்து ரோஹித் சர்மா பேட்டி

நாங்கள் பந்துவீசும் போதும் பந்தில் ஸ்விங் இருந்ததால் வேகப்பந்து வீச்சாளர்களை ஸ்விங் செய்து வீசுமாறு கேட்டுக் கொண்டேன். ஆனாலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது அவர்களுக்கு வாழ்த்துக்கள் என இலங்கை கேப்டன் தசுன் ஷனகா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by