யாரும் கவலைப்பட வேணாம். இனி இந்திய அணியை இவர் பாத்துப்பாரு – டேரன் சமி நம்பிக்கை

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி அந்த பதவிகளில் இருந்து மொத்தமாக விலகி சாதாரண வீரராக விளையாட துவங்கியுள்ளார். கடந்த 2017 முதல் இந்தியாவின் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக இருந்த அவர் ஒரு உலக கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை என்ற விமர்சனத்திற்கு தொடர்ந்து உள்ளாகி வந்தார். அதனால் முதலில் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய அவரை ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து பிசிசிஐ நீக்கியதால் அந்த விரக்தியில் டெஸ்ட் கிரிக்கெட் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார்.

- Advertisement -

பதட்டத்தில் இந்தியா:
டி20, ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகிய போது முன்னாள் இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என யாரும் பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால் 68 போட்டிகளில் 40 வெற்றிகளுடன் இந்தியா மட்டுமல்லாது ஆசிய அளவில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் வெற்றிகரமான கேப்டனாக இருந்த விராட் கோலி அந்த பதவியில் இருந்து விலகியது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏனெனில் கேப்டனாக பொறுப்பேற்ற பொழுது 7வது இடத்தில் இருந்த இந்தியாவை தொடர்ந்து 5 வருடங்களாக நம்பர் ஒன் இடத்தில் ஜொலிக்க வைத்த பெருமை அவரை சாரும். அத்துடன் அவர் தலைமையில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் இந்தியா சரித்திர வெற்றிகளைப் பெற்றது. மொத்தத்தில் கடந்த 3 – 4 மாதத்துக்குள் இந்தியாவின் கேப்டன் பொறுப்பில் நிலவிய சலசலப்புகளும் சர்ச்சைகளும் இந்திய கிரிக்கெட்டில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

kohli 1

பயம் வேண்டாம் :
கேப்டன்ஷிப் பொறுப்பில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றம் இந்திய கிரிக்கெட்டின் வெற்றியிலும் பாதிப்பை ஏற்படுத்தியது என்றே கூறலாம். ஏனெனில் சமீபத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தரமான வீரர்கள் இருந்தபோதிலும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாத இந்தியா படுமோசமான ஒயிட்வாஷ் சந்தித்தது. இதனால் இந்திய கிரிக்கெட் சரிவை நோக்கி செல்கிறதா என்ற ஒரு பயம் இந்திய ரசிகர்களிடையே காணப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டில் தற்போது நிலவும் பதட்டத்திற்காக ரசிகர்கள் பயப்பட தேவையில்லை என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சம்மி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசுகையில்,

Rohith

“களத்தில் விராட் கோலி மிக சிறப்பாக செயல்பட கூடியவர். இருப்பினும் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகியது இந்திய அணியை பாதிக்கும் என எனக்கு தோன்றவில்லை. ரோகித் சர்மா ஒரு உத்வேகத்தை அளிக்கும் கூடிய அபாரமான கேப்டன். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அவரின் கேப்டன்ஷிப்பை பார்த்துள்ளோம். அவர் எம்எஸ் தோனி, கௌதம் கம்பீர் போன்ற வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர். இதுபோன்ற கேப்டன்கள் வெற்றிகளை இயல்பாக பெற கூடியவர்கள் என்பதால் இந்திய கிரிக்கெட் பற்றி எனக்கு கவலை இல்லை. அது ஒரு நல்ல பாதுகாப்பான கையில் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே ஐபிஎல் தொடரில் கேப்டனாக அனுபவம் கொண்ட ரோகித் சர்மா ஒருநாள், டி20 கிரிக்கெட்டின் முழுநேர கேப்டனாக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் விரைவில் டெஸ்ட் அணிக்கும் அவர் கேப்டனாக அறிவிக்கப்பட உள்ளார் என்று செய்திகள் வெளிவருவதால் இந்திய கிரிக்கெட் பற்றி எந்த கவலையும் இல்லை டேரன் சம்மி கூறியுள்ளார்.

இதையும் படிங்க : நான் பாதத்துலேயே இந்த ஒரு விஷயத்துல தோனியை அடிச்சிக்க ஆளில்ல – லுங்கி நெகிடி புகழாரம்

வெல்லப்போவது யார் :
வரும் பிப்ரவரி மாதம் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் வெஸ்ட்இண்டீஸ் விளையாட உள்ளது. அந்த தொடரில் இந்தியாவை வெஸ்ட் இண்டீஸ் தோற்கடிக்கும் எனவும் டேரன் சமி கணித்துள்ளார். இதுபற்றி அவர்,

“கேப்டன் வாய்ப்பில் பொல்லார்ட் அசத்துவார் என நினைக்கிறேன். ஏனெனில் அவர் இதற்கு முன் இந்திய மண்ணில் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டுள்ளார். அவருக்கு இந்திய கால சூழ்நிலைகள் பற்றி நன்கு தெரியும். மேலும் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரில் சில இளம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அபாரமாக விளையாடி வருகிறார்கள். எனவே இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் மிக சிறப்பாக விளையாடும் என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

Advertisement