இந்தியாவுக்கு எதிரான இந்த கேவலமான வேலையை நிறுத்துங்க, பாகிஸ்தானை வெளுக்கும் டேனி மோரிசன் – நடந்த்து என்ன

Danny Morrison
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்தியா மற்றும் ஜிம்பாப்பேவிடம் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால் கதை முடிந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான் கடைசி நேரத்தில் நெதர்லாந்திடம் தென்னாப்பிரிக்கா தோற்று வெளியேறிய அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. அதோடு நிற்காமல் நவம்பர் 9ஆம் தேதியன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் வலுவான நியூசிலாந்தை அசால்டாக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த அந்த அணி இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்று மற்றுமொரு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

அதிலும் நியூசிலாந்துக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் பவுலிங், ஃபீல்டிங் மற்றும் பேட்டிங் என அனைத்து துறைகளிலும் அபாரமாக செயல்பட்ட பாகிஸ்தான் லீக் சுற்றில் இருந்ததை விட தற்போது வலுவான சவாலான அணியாக மாறியுள்ளது. குறிப்பாக இந்த தொடரில் சுமாரான ஃபார்மில் தவிர்த்து வந்த கேப்டன் பாபர் அசாம் – முகமத் ரிஸ்வான் ஆகியோர் அரையறுதியில் பார்முக்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு பெரிய புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

கேவலமான வேலை:
அதனால் 1992இல் இதே ஆஸ்திரேலியாவில் இதே போல் ஆரம்பத்தில் தோல்விகளை சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டெழுந்து இறுதியில் இம்ரான் கான் தலைமையில் கோப்பையை வென்ற மேஜிக்கை இம்முறை பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் நிகழ்த்தும் என்று அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் எதிர்பார்க்கின்றனர். அதை விட இந்தத் தொடரின் முதல் போட்டி உட்பட காலம் காலமாக வரலாற்றுத் தோல்விகளை பரிசளித்து வரும் இந்தியாவை பைனலில் தோற்கடித்து பழி தீர்க்க வேண்டும் என்பதற்காக 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து தோற்க வேண்டும் எனவும் அந்நாட்டவர்கள் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் “இந்த உலக கோப்பையின் இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் விளையாடும். அதில் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடிக்கும். ஏனெனில் கிரிக்கெட்டின் ஊழல் மாஃபியா இந்தியாவுக்கு எதிராக நீதி கிடைக்க வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம்” என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் மற்றும் பிரபல வர்ணனையாளர் டேனி மோரிசன் தெரிவித்ததாக பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்தனர்.

- Advertisement -

அதை பார்த்து அதிர்ச்சடைந்த டேனி மோரிசன் தாம் அவ்வாறு சொல்லவில்லை என்பதை தனது ட்விட்டரில் பதிவிட்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் செய்த மற்றுமொரு போலியான கேவலமான வேலையை அம்பலப்படுத்தினார். இது பற்றி தனது ட்விட்டரில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “நான் இதை இப்போது தான் பார்த்தேன். இது முழுமையான குப்பை. சமூக வலைதளங்களில் இது ஒரு முட்டாள்தனம்” என்று கூறியுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் வருவதால் “எதற்கு இந்த கேவலமான வேலை?” என்று இந்திய ரசிகர்கள் பாகிஸ்தானை கலாய்த்து வருகிறார்கள்.

முன்னதாக இந்த தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் இடுப்பளவு வந்த பந்தை சிக்சர் அடித்து விட்டு விராட் கோலி கேட்டதால் அம்பையர்கள் வேண்டுமென்றே நோ பால் கொடுத்ததாகவும் ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆகியோரை திருப்தி படுத்துவதற்காக அதை எதிர்த்து எதுவும் பேச முடியவில்லை என்றும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் கூறியதாக இதே போல் பாகிஸ்தான் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர்.

ஆனால் அதை மறுத்த அவர் தயவு செய்து அதை டெலிட் செய்யுமாறு இதே போல ட்விட்டரில் உண்மையை அம்பலப்படுத்தினார். அந்த வகையில் தொடர்ச்சியாக உண்மைக்கு புறம்பான கருத்துக்களை முன்னாள் வெளிநாட்டு வீரர்கள் சொன்னதாக போலியாக உருவாக்கி இந்தியாவுக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் ரசிகர்களை “இதை விட மானங்கெட்ட செயல் எதுவும் இருக்காது” என்று இந்திய ரசிகர்கள் மீண்டும் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement