இப்படி சொதப்பும் ஒரு வீரரை எப்படி டீம்ல வச்சிருக்கீங்க ? – டேனிஷ் கனேரியா கேள்வி

Kaneria

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இதன் காரணமாக தற்போது நடைபெற்று வரும் நான்காவது போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் இந்த நான்காவது போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 191 ரன்களுக்கு சுருண்டது.

indvseng

இந்த போட்டியில் விளையாடிய முன்னணி வீரர்கள் பலரும் சொதப்பிய நிலையில் துணை கேப்டன் ரஹானே மீது பெரிய அளவு விமர்சனம் எழுந்துள்ளது. ஏனெனில் கடைசியாக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அரைசதம் அடித்த ரஹானே மற்றபடி இந்த தொடரில் பெரிய அளவு ரன்களை குவிக்கவில்லை. மொத்தம் ஆறு இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள அவர் 109 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் பெரிய அளவில் எழுந்துள்ளன. தற்போது நடைபெற்று வரும் 2 ஆவது இன்னிங்சிலும் ரஹானே டக் அவுட் ஆகியுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா கூறுகையில் : இந்த தொடர் முழுவதுமே ரஹானேவின் ஆட்டம் மிகவும் சொதப்பலாக இருக்கிறது.

Rahane-1

இதனால் அவரது இடம் குறித்து இந்திய அணி யோசிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ரகானே மட்டுமல்ல இந்திய அணியின் மிடில் ஆர்டர் மோசமாக உள்ளது. சூரியகுமார் யாதவ், ஹனுமா விஹாரி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும். இன்னும் அவர்களுக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது எனக்கு புரியவில்லை.

- Advertisement -

sky

இலங்கை தொடர் முடிந்த பின்னர் இருவரை அழைத்து வந்து இங்கு அமர வைப்பது ஏன் ? சூர்யகுமார் யாதவ் அனைத்து கண்டிஷனிலும் ஸ்கோர் செய்யக்கூடிய வீரராக தெரிகிறார். அவருக்கு வாய்ப்பு கொடுத்துப் பார்க்க வேண்டும் என்பதே எனது கருத்து என டேனிஷ் கனேரியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement