இந்திய அணி ஏன் இந்த தப்பை செஞ்சாங்கன்னு எனக்கு தெரியல – அணியில் உள்ள குறையை சுட்டிக்காட்டிய டேனிஷ் கனேரியா

Kaneria
- Advertisement -

இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வருகிற ஜூன் 18-ஆம் தேதி மோத உள்ளது. கொரோனா சூழலில் இந்தியாவில் ஐ.பி.எல் தொடர் தடைபட்டுள்ளதால் தற்போது இந்திய ரசிகர்களின் கவனம் மற்றும் எதிர்பார்ப்பு இந்த போட்டியின் மீது அதிகரித்துள்ளது. இதற்கான இந்திய அணி தற்போது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

INDvsNZ

- Advertisement -

அந்த போட்டியை முடித்துவிட்டு அதே அணிதான் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே சில வீரர்கள் அணியில் சேர்க்கப் படவேண்டும் என பல முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்சனமும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா இந்திய அணி தேர்வில் உள்ள ஒரு தவறை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 4 ஸ்பின்னர்கள் விரல்களை பயன்படுத்தி பந்துவீச கூடியவர்கள் அதாவது பிங்கர் ஸ்பின்னர்ஸ் ஆனால் அதேவேளையில் இந்த தொடரில் ஒரு ரிஸ்ட் ஸ்பின்னர் கூட தேர்வு செய்யப்படவில்லை. இது இந்திய அணிக்கு பின்னடைவு என்று கூறியுள்ளார்.

Ashwin

இது குறித்து தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணி தற்போது சிறப்பான அணியாக தான் உள்ளது. இருந்தாலும் அணியில் ஒரு ரிஸ்ட் ஸ்பின்னர் இல்லை என்பதுதான் வருத்தம். இங்கிலாந்து போன்ற மைதானங்களில் விரல்களை பயன்படுத்தி பந்து வீசக்கூடிய பந்து வீச்சாளர்களை விட மணிக்கட்டை பயன்படுத்தி பந்து வீசும் பந்துவீச்சாளர்களுக்கு அதிக சவுகரியம் கிடைக்கும். அதனால்தான் இங்கிலாந்தில் என்னுடைய பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.

Chahar 1

எனவே இந்திய அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்னைப் பொறுத்தவரை ராகுல் சாகர் இந்த அணியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அவரது உயரம் மற்றும் பந்தினை டெலிவரி செய்யும் விதம் ஆகியவை இங்கிலாந்து மைதானங்களில் சாதகமாக இருக்கும் என்று டேனிஷ் கனேரியா சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement