- Advertisement -
உலக கிரிக்கெட்

இந்தியாவை காப்பி அடிச்சா ஜெயிக்க முடியுமா? ஜிம்பாப்வேவிடம் அடிச்சுட்டு கோலியுடன் கம்பேரிசனா? கனேரியா விளாசல்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் சுற்றுடன் வெளியேறியதால் ஏராளமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக கத்துக்குட்டியான அமெரிக்காவிடம் முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் சூப்பர் ஓவரில் தோல்வியை சந்தித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக வெறும் 120 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது.

அதனால் கனடா மற்றும் அயர்லாந்துக்கு எதிராக வென்றும் பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த தோல்விக்கு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சுமாராக செயல்பட்ட பாபர் அசாம் முக்கிய காரணமானதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக மட்டும் அடிக்கும் பாபர் அசாமை இந்தியாவின் விராட் கோலியுடன் ஒப்பிடுவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இதுல கம்பேரிசன் வேற:
மேலும் இந்தியாவை காப்பியடிப்பது போல் 2011 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய பயிற்சியாளர் கேரி கிரிஸ்டனை பயிற்சியாளராக நியமித்தால் மட்டும் வெற்றி பெற முடியாது என்று பாகிஸ்தான் வாரியத்தை அவர் சாடியுள்ளார். இது பற்றி ஸ்போர்ட்ஸ்நௌவ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “தொடர்ச்சியாக பாபர் – ரிஸ்வான், ரிஸ்வான் – பாபர் ஆகியோரை மையப்படுத்திய உபயோகமற்ற அணியை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள்”

“அதனால் என்ன பயன்? இன்னும் எத்தனை நாட்கள் இந்த பெயர்களை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் பெரிய தொடர்கள் வரும் போது அவர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அவர்கள் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து போன்ற அணிகளுக்கு எதிராக மட்டுமே ரன்கள் அடிக்கின்றனர். ஆனாலும் நீங்கள் உடனடியாக விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடுகின்றனர்”

- Advertisement -

“நீங்கள் இந்தியா உலகக் கோப்பையை வெல்வதற்கு உதவிய கேரி கிர்ஸ்டனை புதிய பயிற்சியாளராக கொண்டு வந்தீர்கள். அவரால் சில மாதங்களில் எந்த ஆச்சரியத்தையும் நிகழ்த்த முடியாது. ஏனெனில் அவர் மேஜிக்மேன் கிடையாது. பாகிஸ்தானில் கிரிக்கெட்டும் அரசியலும் ஒன்றாக கலந்துள்ளது. எனவே முதலில் கேரி இங்கே உள்ள அரசியலை புரிந்து கொள்ள வேண்டும்”

இதையும் படிங்க: அதுல மட்டும் போறேன்னு நினைக்காதீங்க.. இதான் கடைசி நாள்.. ட்ரெண்ட் போல்ட் அறிவிப்பால் ரசிகர்கள் சோகம்

“அதன் பின்பே பாகிஸ்தான் அணியுடன் வேலை செய்ய துவங்க வேண்டும்” என்று கூறினார். முன்னதாக பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை என்று கேரி கிர்ஸ்டன் நேற்று வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அதனால் இந்தியா அணியில் வேலை செய்த தாம் பாகிஸ்தான் போன்ற அணியை பார்த்ததில்லை என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -