டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் : இந்திய வீரரான இவர் இரட்டைசதம் அடிப்பது உறுதி – கனேரியா ஓபன்டாக்

Kaneria-1
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியது ஐசிசி. அதன்படி கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடரின் இறுதிப் போட்டியானது வருகிற 18ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் நடைபெற இருக்கின்றது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இந்த இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கின்றன. கிரிக்கெட் வராலாற்றிலேயே முதல் முறையாக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் நடைபெறுவதால், இந்த இறுதிப் போட்டியானது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

INDvsNZ

- Advertisement -

இந்நிலையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்த பல்வேறு கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அதில் இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித் சர்மாவால் நிச்சயம் இந்த டெஸ்ட் போட்டியில் இரட்டை சதத்தை அடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலியை விட ரோகித் சர்மா டெக்னிக்கலாக ரொம்பவே ஸ்ட்ராங்கான வீரர். கோலி சூப்பர்ஸ்டார் வீரர் தான் ஆனாலும் அவரை விட ரோகித் தான் மிகப்பெரிய இன்னிங்க்ஸ் விளையாட முடியும்.

rohith 1

முக்கியமான போட்டிகளில் ரோகித் சர்மா பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த வகையில் தற்போது இந்த டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஒரு டபுள் செஞ்சுரி பாக்கி உள்ளது. எனவே நிச்சயம் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இரட்டை சதம் விளாசி அசத்துவார் என்று கனேரியா கூறினார்.

Rohith

ஒரு நாள் போட்டிகளில் 3 முறை இரட்டை சதம் விளாசிய ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் இதுவரை ஒரு முறை மட்டுமே இரட்டைசதம் விளாசியுள்ளார் எனவே இந்த போட்டியில் அவர் பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement