நல்ல மெச்சூரிட்டி இருக்கு. வேர்ல்டு கிளாஸ் பிளேயரா வருவாரு – இந்திய வீரரை பாராட்டிய டேனிஷ் கனேரியா

Kaneria
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா அவ்வப்போது கிரிக்கெட்டில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் குறித்து வெளிப்படையாக பேசக் கூடியவர். அதிலும் குறிப்பாக இந்திய அணி விளையாடும் அனைத்து தொடர்களிலும் இந்திய அணியின் வீரர்கள் செயல்படும் விதம் குறித்தும் வெளிப்படையாக கருத்துக்களை பகிரக் கூடியவர். அந்த வகையில் நடைபெற்ற முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது குறித்தும் தற்போது பேசியுள்ளார்.

Rishabh Pant IND vs ENG Rohit Sharma

அந்த குறிப்பிட்ட மூன்றாவது போட்டியில் ஹார்டிக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விளையாடிய விதம் குறித்தும் அவர் பேசியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் 260 ரன்கள் என்கிற இலக்கினை துரத்திய இந்திய அணியானது 47 பந்துகளை மிச்சம் வைத்த வேளையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதேவேளையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஆட்டம் இழக்காமல் 125 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்நிலையில் ரிஷப் பண்ட் மற்றும் பாண்டியா ஆகியோரது ஜோடி விளையாடிய ஆட்டம் யுவராஜ் மற்றும் கைஃப் ஆகியோர் நாட்வெஸ்ட் தொடரில் விளையாடியது போன்று இருந்தது என்று கூறியுள்ளார்.

Rishabh Pant and Hardik Pandya

இது குறித்து அவர் கூறுகையில் : ரிஷப் பண்ட் மற்றும் பாண்டியா ஆகியோரது ஜோடி முக்கியமான சமயத்தில் தேவையான பார்ட்னர்ஷிப்பை அமைத்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது. அவர்கள் இருவரும் விளையாடிய விதம் யுவராஜ் மற்றும் முகமது கைப் விளையாடியது போன்று இருந்தது. அதிலும் குறிப்பாக ரிஷப் பண்ட் தற்போது மிகச் சிறப்பான முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

நிச்சயம் அவர் இதேபோன்று சிறப்பாக விளையாடும் பட்சத்தில் ஒரு வேர்ல்டு கிளாஸ் பிளேயராக மாறுவார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சில வீரர்களிடம் மட்டுமே இது போன்ற அற்புதமான திறமை இருக்கும். அந்த வகையில் ரிஷப் பண்ட் தற்போது மிகச் சிறப்பான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க : இப்போதைக்கு நான் டி20 வேர்ல்டுகப் பத்தி யோசிக்கல. என்னோட கவனம் இதில் மட்டும் தான் – தினேஷ் கார்த்திக் பேட்டி

அவரால் 100 ரன்கள் என்பதை 200 ரன்களாக கூட மாற்ற முடியும். அந்த அளவிற்கு அவர் ஒரு அற்புதமான வீரர். ரிஷப் பண்ட் இனிவரும் காலத்தில் இன்னும் மிகப்பெரிய வீரராக மாறுவார் என டேனிஷ் கனேரியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement