இந்திய அணியின் உண்மையான 3டி பிளேயர் இவர்தான். டேனிஷ் கனேரியா கைகாட்டிய வீரர் – யார் தெரியுமா ?

Kaneria

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்து இந்த இறுதிப்போட்டி குறித்தான தகவல்களே தற்போது அதிகமாக காணப்படுகிறது. சமூகவலைதளத்தில் நாம் பார்க்கும் இடமெல்லாம் இந்த இறுதி போட்டி குறித்த கருத்துக் கணிப்புகள் மற்றும் விமர்சனங்கள் என நிரம்பி வழிகிறது. ரசிகர்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த இறுதிப்போட்டியானது வரும் 18 ஆம் தேதி ஏஜஸ் பவுல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

INDvsNZ

முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த இறுதிப்போட்டி குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்த இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட இருக்கும் வீரர்கள் குறித்தும் பலர் தங்களது கருத்துக்களை ஏற்கனவே வெளியிட்டு இருந்தனர்.

- Advertisement -

அதில் இந்திய அணி சார்பாக ரோகித் சர்மா, விராத் கோலி நியூசிலாந்து அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் என பலரும் பேட்ஸ்மேன்களை புகழ்ந்து பேசி வரும் நிலையில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா இந்த இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர் குறித்த தனது கருத்தை வெளியிட்டுள்ளார் இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது :

gill 2

என்னை பொறுத்தவரை மூன்று வகை கிரிக்கெட்டிலும் பவுலர்களின் பணி என்பது முக்கியமான ஒன்று. ஒரு பந்து வீச்சாளர் நன்றாக பந்து வீசி எதிரணியின் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தி அவர்களது விக்கெட்டுகளை கைப்பற்றினால் அந்த அணி எளிதில் வெற்றி பெறும். அந்த வகையில் இந்தியாவை பொருத்தவரை ஜடேஜா சிறப்பாக பந்து வீச கூடியவர் என்னை பொறுத்தவரை இந்தியாவின் 3டி பிளேயர் என்றால் ஜடேஜாவை தான் நான் சொல்வேன்.

- Advertisement -

jadeja 1

ஏனெனில் முக்கியமான நேரத்தில் அவரால் பந்துவீசி விக்கெட் வீழ்த்தி தரமுடியும். அதுமட்டுமின்றி பேட்டிங்கில் கடைசி வரிசையில் இறங்கினாலும் ஒரு ப்ராப்பர் பேட்ஸ்மேன் போல அவரால் பேட்டிங் செய்ய முடியும். அதே போன்று அவரது பீல்டிங் பற்றி நாம் அறிந்ததே. அந்த வகையில் ஜடேஜா டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் மதிப்பு மிக்க வீரராக இருப்பார் என கனேரியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement