தவான் வேணாம். இவரை கேப்டனாக்குங்க. இலங்கை தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் குறித்து பேசிய – டேனிஷ் கனேரியா

Kaneria

ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது, அங்கு 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. முன்னனி வீரர்களைக் கொண்ட இந்திய டெஸ்ட் அணியானது இங்கிலாந்துக்கு செல்லவிருப்பதால், இலங்கைக்கு எதிரான தொடரில் இளம் வீரர்கள் அடங்கிய இரண்டாவது இந்திய அணியே பங்கு பெறுமென்று ஏற்கனவே அறிவித்துள்ளார் பிசிசிஐயின் தலைவரான சவுரவ் கங்குலி.

sl

இந்த அணிக்கு மூத்த வீரரான ஷிகர் தவான்தான் கேப்டனாக இருப்பார் என்று அனைவரும் கூறி வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா இலங்கைக்கு எதிரான தொடரில் ஷிகர் தவானுக்கு பதிலாக வேறொரு இந்திய இளம் வீரரதைத்தான் நான் கேப்டனாக செயல்பட வைப்பேன் என்று கருத்துக் கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசியுள்ள அவர்,
இலங்கை தொடரானது இந்திய அணி தனது அடுத்த கேப்டனை உருவாக்குவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கிறது. இந்திய அணிக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன.

- Advertisement -

ஒன்று ஷிகர் தவானை கேப்டனாக நியமிப்பது அல்லது ஐபிஎல் தொடரில் ஒரு விக்கெட் கீப்பராகவும் ராஜஸ்தான் ராயல் அணியின் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சனை கேப்டனாக நியமிப்பது. இந்திய அணியின் மூத்த வீரராக ஷிகர் தவான் இருக்கிறார். ஆனால் எதிர்கால இந்திய அணியை மனதில் வைத்துக்கொண்டு ஒரு இளம் கேப்டனை உருவாக்க வேண்டும் என்றுதான் நான் கூறுவேன். இலங்கை தொடரில் தவான்தான் இந்திய அணியை வழிநடத்தப்போகிறார் என்பது தெரியும்.

Samson-1

ஆனால் கேப்டனை தேர்வு செய்யும் இடத்தில் நானிருந்தால், என்னுடைய தேர்வு சஞ்சு சாம்சனாகத்தான் இருக்கும். விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியப் பின்னர், அவரின் இடத்திலிருந்து இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்த இப்போதே ஒரு இளம் வீரரை உருவாக்க வேண்டுமென்றும் அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

Samson-1

ஜூலை மாதம் இலங்கை செல்லவிருக்கும் இந்திய இளம்படையில், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், ஷிகர் தவான், ப்ரித்வி ஷா, ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி, ராகுல் சஹார், தீபக் சஹார், புவனேஷ் குமார் போன்ற வீரர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சுற்றுப் பயணம் ஜூலை மாதம் 13ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி முடிவடைய இருக்கிறது.

Advertisement