IND vs ENG : அஷ்வினுக்கு சான்ஸ் தரல இப்போ அனுபவிங்க – வரலாற்று தோல்வியால் இந்திய நிர்வாகத்தை சாடும் முன்னாள் பாக் வீரர்

ashwin
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 5-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. கடந்த வருடம் துவங்கிய இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்த போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி கடந்த ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காமில் துவங்கியது. அதில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்தியா போராடி 416 ரன்கள் சேர்த்தது. விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 98/5 என தடுமாறிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக அதிரடி காட்டிய ரிஷப் பண்ட் சதமடித்து 146 ரன்களும் பொறுமையை காட்டிய ரவீந்திர ஜடேஜா சதமடித்து 104 ரன்களும் எடுத்தனர்.

Rishabh-Pant-and-Ravindra-Jadeja

- Advertisement -

கடைசியில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 35 ரன்களை பறக்கவிட்ட ஜஸ்பிரித் பும்ரா உலக சாதனை படைத்தார். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து தரமாக பந்துவீசிய இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாமல் 284 ரன்களுக்கு சுருண்டது. ஜோ ரூட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ சதமடித்து 106 ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

மோசமான பவுலிங்:
அதனால் 132 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 2-வது இன்னிங்சில் 400க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இங்கிலாந்தின் எழுச்சியான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் வெறும் 246 ரன்களுக்கு சுருண்டது. விராட் கோலி, விகாரி உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் மீண்டும் ஏமாற்றிய நிலையில் அதிகபட்சமாக பொறுப்பை காட்டிய புஜாரா அதிகபட்சமாக 66 ரன்களும் ரிஷப் பண்ட் 57 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

Joe Root Jonny Bairstow Rishabh Pant IND vs ENg

இறுதியில் 378 என்ற கடினமான இலக்கை துரத்திய இங்கிலாந்து தொடக்க வீரர்களின் அதிரடியால் 107/0 என்று அபார தொடக்கத்தைப் பெற்று அச்சுறுத்தியது. அப்போது அற்புதமாக பந்து வீசிய இந்தியா லீஸ் 56, கிராவ்லி 46, போப் 0 என அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து பதிலடி கொடுத்தது. ஆனால் ஏற்கனவே முரட்டுத்தனமான பார்மில் இருக்கும் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் அடுத்ததாக களமிறங்கி இந்தியாவின் வெற்றியை தவிடுபொடியாக்கியனர். 4-வது நாளில் ஜோடி சேர்ந்து கடைசி வரை அவுட்டாகாமல் ரூட் 142* பேர்ஸ்டோ 114* என அடுத்தடுத்த சதங்களை அடித்த அவர்கள் சூப்பர் பினிசிங் கொடுத்தனர்.

- Advertisement -

அஷ்வின் சான்ஸ்:
அதனால் 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்த இங்கிலாந்து சொந்த மண்ணில் எங்களை சுலபமாக சாய்க்க முடியாது என்று இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது. மறுபுறம் 3 நாட்கள் அபாரமாக விளையாடி கையில் வைத்திருந்த வெற்றியை கடைசி 2 நாட்களில் கோட்டைவிட்ட இந்தியா 2007க்கு பின் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது.

இப்போட்டியில் 2-வது இன்னிங்சில் பும்ராவை தவிர இதர பவுலர்கள் மோசமாக செயல்பட்டது இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்தது. குறிப்பாக வெளிநாடுகளிலும் கடைசி நாளில் சுழல் பந்துவீச்சு எடுபடும் என்ற நிலைமையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இதனால் உலகின் நம்பர் ஒன் சுழல் பந்து வீச்சாளராக கருதப்படும் அஷ்வினை இப்போட்டியில் இந்தியா சேர்க்காமல் தவறு செய்தது தெளிவாகியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் அவரின் இடத்தில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் தேவை என்ற நோக்கத்தில் இந்திய நிர்வாகம் தேர்வு செய்த ஷர்துல் தாக்கூர் இப்போட்டியில் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் பெரிய அளவில் சிறப்பாக செயல்படவில்லை. கடந்த வருடம் விராட் கோலி – ரவி சாஸ்திரி கொண்ட தலைமை கூட்டணியால் 4 போட்டிகளிலும் பெஞ்சில் அமர வைக்கப்பட்ட அஷ்வினுக்கு இம்முறை புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வாய்ப்பளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் அதே தவறை செய்தார்.

Danish-Kaneria

இந்நிலையில் இப்போட்டியில் அஸ்வின் சேர்க்கப்படாதது இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்துள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் தினேஷ் கனேரியா வெளிப்படையாக விமர்சித்துள்ளார். இது பற்றி சமீபத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பர்மிங்காமில் வெற்றி பெறும் நிலையிலிருந்து இந்தியா தோற்றுள்ளது. அஷ்வின் ஏன் விளையாடவில்லை, இந்த முடிவை யார் எடுத்தது.

இதையும் படிங்க : IND vs ENG : இங்கிலாந்து அணிக்கெதிரான மோசமான தோல்வி குறித்து பேசிய – இந்திய கேப்டன் பும்ரா

புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இங்கிலாந்து கால சூழ்நிலைகளில் நிறைய விளையாடி 3-வது நாளிலிருந்து பந்து சுழலும் என்பதைப் பற்றி நன்கு தெரிந்தவர். ஆனாலும் வாய்ப்பு கொடுக்கவில்லை. பும்ராவை தவிர வேறு யாருமே ஆச்சர்யங்களை நிகழ்த்தவில்லை. தவறு செய்த இந்தியா தற்போது தண்டனையை அனுபவிக்கிறது” என்று கூறினார்.

Advertisement