ரொனால்டோவை போன்ற பும்ராவை வெச்சு இப்படியா பைத்தியக் காரத்தனத்தை செய்வீங்க? கம்பீரை சாடிய ஸ்டைன்

Dale Steyn
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக இரண்டாவது போட்டி ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்கம் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதும் குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்படாததும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

குறிப்பாக முதல் போட்டியில் பும்ராவை தவிர்த்து மற்ற பவுலர்கள் சுமாராக விளையாடியது இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமானது. எனவே தொடரை சமன் செய்ய இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடுன் இந்தியாவுக்கு பும்ரா விளையாடுவது அவசியமாகிறது. ஆனால் பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக இப்போட்டியில் ஓய்வெடுக்கும் அவர் 3வது போட்டிக்கு விளையாட வருவார் என்று கேப்டன் சுப்மன் கில் தெரிவித்தார்.

- Advertisement -

ரொனால்டோ வைத்துக்கொண்டு:

இத்தனைக்கும் முதல் போட்டி முடிந்த பின் 2வது போட்டி துவங்குவதற்கு 7 நாட்கள் இடைவெளி இருந்தது. அந்த 7 நாட்களே ஓய்வெடுக்க போதுமானது என்று தெரிவித்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இப்போட்டியில் பும்ரா விளையாடியிருக்க வேண்டும் என்று விமர்சித்தார். ஆனால் ஏற்கனவே பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே மட்டுமே விளையாடுவார் என்ற பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அறிவித்திருந்தார்.

அதை இந்தப் போட்டியிலேயே அவர் செயல்படுத்தியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைய உள்ளதாக பல முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். இந்நிலையில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ போல ஜஸ்ப்ரித் பும்ரா கிரிக்கெட்டின் கில்லி என்று டேல் ஸ்டைன் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட ரொனால்டோவை போர்ச்சுக்கல் விளையாடத் தேர்ந்தெடுக்காமல் விட்டால் அது பைத்தியக்காரத்தனம் என்று ஸ்டைன் கூறியுள்ளார்.

- Advertisement -

கம்பீரின் பைத்தியக்காரத்தனம்:

அதே போல இப்போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ராவை விளையாட வைக்காத இந்தியா பைத்தியக்காரத்தனத்தை செய்துள்ளது தமக்கு குழப்பத்தைக் கொடுப்பதாகவும் ஸ்டைன் சாடியுள்ளார். இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “போர்ச்சுக்கல் உலகிலேயே மிகவும் சிறந்த கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ இருக்கிறார். ஆனால் அவர்கள் அவரை விளையாட தேர்ந்தெடுக்கவில்லை”

இதையும் படிங்க: பும்ரா இப்படி செய்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. அதிருப்தியை வெளிப்படுத்திய – ரவி சாஸ்திரி

“அது பைத்தியக்காரத்தனம். அதே போல இந்தியாவிடம் பும்ரா இருக்கிறார். ஆனால் அவர்கள் அவரை விளையாட வைக்க தேர்ந்தெடுக்கவில்லை. என்ன இது? இதைப் பார்த்து நான் குழப்பமடைந்துள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பும்ரா இல்லாமல் விளையாடும் இந்தியா முதல் நாளில் 310/5 ரன்கள் எடுத்துள்ளது. பும்ரா இல்லாத காரணத்தால் இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது மிகவும் கடினமானதாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement