- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சச்சின், விராட் கோலியை எல்லாம் தாண்டி வைபவ் சூர்யவன்ஷி சாதிப்பார்.. காரணத்தை கூறிய – டேல் ஸ்டெயின்

இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 15 வயதான துவக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 16 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதம் என 776 ரன்களை குவித்தார். அதிலும் குறிப்பாக இந்த தொடரில் மட்டும் அவர் 63 பவுண்டரி மற்றும் 72 சிக்ஸர்களை விளாசினார்.

சச்சின், விராட் கோலியை முந்தி சூர்யவன்ஷி அசத்துவார் : டேல் ஸ்டெயின்

இதன் மூலம் 2026 ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றி அசத்தியிருந்தார். சர்வதேச பவுலர்களுக்கு எதிராக இவரது அதிரடியான ஆட்டத்தை பார்த்த பலரும் இந்திய சீனியர் அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற ஆதரவுகளை தெரிவித்து வந்தனர்.

- Advertisement -

அந்த வகையில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு பி.சி.சி.ஐ தற்போது வாய்ப்பினை வழங்கியுள்ளது. இவ்வேளையில் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி எதிர்வரும் காலத்தில் சச்சின் மற்றும் விராட் கோலி ஆகியோரது பல்வேறு சாதனைகளை முறியடிப்பார் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான டேல் ஸ்டெயின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : வைபவ் சூர்யவன்ஷி தனது கிரிக்கெட் கரியர் முடிவதற்குள் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியை விட மிகப்பெரிய சாதனைகளை படைப்பார் என்று நம்புகிறேன். ஏனெனில் தற்போதுள்ள சர்வதேச வீரர்களை காட்டிலும் இளம் வீரரான அவரிடம் ஏகப்பட்ட திறமை உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து திடீர் ஓய்வை அறிவித்த கேன் வில்லியம்சன் – என்ன காரணம்?

அதோடு தற்போது பதினைந்து வயது மட்டுமே நிரம்பிய அவர் இன்னும் பல ஆண்டுகள் விளையாடுவார் என்பதினால் அவரால் பெரிய இடத்தை நோக்கி செல்ல முடியும். அதே போன்று இனிவரும் இந்திய அணிக்கு அவர் மிகப்பெரிய சொத்தாகவும் மாறுவார் என டேல் ஸ்டெயின் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -