பும்ரா இல்லனாலும் இந்தியாவுக்காக.. அவர் 5வது டெஸ்டில் 5 விக்கெட்ஸ் எடுத்து அசத்துவாரு.. டேல் ஸ்டைன் கணிப்பு

Dale Styen
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. அந்த நிலையில் ஜூலை 31ஆம் தேதி லண்டனில் இருக்கும் ஓவல் மைதானத்தில் 5வது போட்டி துவங்குகிறது.

அந்தப் போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது. அந்தப் போட்டியில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடுவாரா என்பது சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில் காயத்தைத் தவிர்ப்பதற்காக அவர் இத்தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று ஆரம்பத்திலேயே அறிவிக்கப்பட்டது. அதன் படி அவரும் 3 போட்டிகளில் விளையாடி முடித்து விட்டார்.

- Advertisement -

பும்ரா இல்லனா என்ன:

ஒருவேளை ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடாமல் போனால் அது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவுக்காக அசத்துவார் என்று ஜாம்பவான் டேல் ஸ்டைன கணித்துள்ளார். இது பற்றி அவர் ட்விட்டரில் இன்று காலை பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

“5வது டெஸ்ட் போட்டியில் சிராஜ் 5 விக்கெட்டுகளை எடுப்பார்” என்று பதிவிட்டுள்ளார். அவர் கூறுவது போல ஜஸ்ப்ரித் பும்ரா இல்லாத சமயங்களில் சிராஜ் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக 2021 காபா, 2024 கேப் டவுன் போட்டிகளில் 5 விக்கெட்டுகள் எடுத்த அவர் அம்மைதானங்களில் இந்தியா முதல் முறையாக ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற உதவினார்.

- Advertisement -

கணிப்பு நிஜமாகுமா:

சொல்லப்போனால் இத்தொடரில் 2வது போட்டியில் பும்ரா விளையாடாததால் இந்தியா தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த சிராஜ் பர்மிங்காம் மைதானத்தில் முதல் முறையாக இந்தியா வெற்றி பெற உதவினார். அதே போல ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியிலும் சிராஜ் 5 விக்கெட்டுகளை எடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: தோனி மாதிரி எனக்கு அதை செய்ய ஆசை தான்.. ஆனா இந்தியாவுக்காக மகிழ்ச்சியா கீப்பிங் செஞ்சேன்.. ஜுரேல் பேட்டி

இதற்கிடையே 5வது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் காயத்தால் விலகியுள்ளார்கள். அது இங்கிலாந்துக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதைப் பயன்படுத்தி இளம் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யுமா என்பதையும் பார்ப்போம்.

Advertisement