- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த பயமே பும்ராவுக்கு விக்கெட்ஸை அள்ளித் தருது.. அவர் தான் எல்லாருக்கும் ப்ளூபிரிண்ட்.. ஸ்டைன் பாராட்டு

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 31 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

அடுத்ததாக விளையாடும் இந்தியா முதல் நாள் முடிவில் 37/1 ரன்களை எடுத்துள்ளது. இன்னும் 122 ரன்கள் பின்தங்கியுள்ள இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 12 ரன்னில் அவுட்டானார். களத்தில் கேஎல் ராகுல் 13*, வாஷிங்டன் சுந்தர் 6* ரன்களுடன் உள்ளார்கள். முன்னதாக இப்போட்டியில் ஐசிசி நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர் என்பதை நிரூபிக்கும் வகையில் பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

- Advertisement -

பெயரிலேயே பயம்:

இந்நிலையில் இப்போட்டியில் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ப்ளூபிரிண்ட் கொடுக்கும் வகையில் பும்ரா துல்லியமாக பந்து வீசியதாக தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டைன் தெரிவித்துள்ளார். அத்துடன் பும்ராவை சமாளித்து விட்டால் மற்ற பவுலர்களை எளிதாக எதிர்கொண்டு ரன்கள் குவிக்கலாம் என்றும் எதிரணி பேட்ஸ்மேன்கள் நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த பயமே பும்ராவுக்கு விக்கெட்டுகளை அள்ளித் தருவதாகவும் ஸ்டைன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பும்ரா 145, 140 கி.மீ வேகத்தில் உங்களுக்கு எதிராக பந்து வீசுகிறார். அது மிகவும் வேகமானது. அவர் எதையும் கொடுக்காமலேயே விக்கெட்டுகளை எடுக்கிறார். அதுவே அவருடைய தேர்ச்சியாகும். அவருடைய பெயர் பயத்தைக் கொண்டு வருகிறது. பொதுவாக எதிரணியின் உடைமாற்றும் அறையில் பும்ராவின் பந்து வீச்சை அவுட்டாகாமல் கடந்து விடுவோம் என்று எதிரணி பேட்ஸ்மேன்கள் பேசுவார்கள்”

- Advertisement -

ஸ்டைன் பாராட்டு:

“ஆனால் ஒவ்வொரு முறையும் பும்ரா பவுலிங் செய்யும் போது ஓரிரு விக்கெட்டுகள் எடுத்து விடுகிறார். அது எதிர்ப்புறம் வீசும் மற்ற பவுலர்களும் விக்கெட்டுகள் எடுப்பதற்கான நிலையைப் பெற்றுக் கொடுக்கிறது. பும்ரா பந்து வீசும் இடங்களால் மட்டும் அவருக்கு விக்கெட் கிடைப்பதில்லை. அவருடைய பெயரே அவருக்கு விக்கெட்டுக்களை பெற்றுக் கொடுக்கிறது”

இதையும் படிங்க: 11 போர்ஸ் 15 சிக்ஸ்.. 32 பந்தில் 100.. அமீரகத்தை பொளந்த சூர்யவன்சி உலக சாதனை.. இந்தியா மாஸ் வெற்றி

“பும்ராவின் பவுலிங் இன்றைய நாளுக்கு ப்ளூ பிரிண்ட்டாக இருந்தது. தரையில் கடினமாக அடித்த அவர் அதிகமான அறைக்குழி பந்துகளை வீசாமல் ஸ்டம்ப்புகளை குறி வைத்தார். அதே போலத்தான் தென்னாப்பிரிக்க பவுலர்களும் பந்து வீச முயற்சிக்க வேண்டும். அவருடைய வழியைப் பின்பற்றினால் உங்களுக்கும் அவரைப் போல விக்கெட்டுகள் பரிசாக கிடைக்கும்” என்று கூறினார்.

- Advertisement -