நான் அதிகம் நேசித்த இடத்தில் இருந்து விடை பெறுகிறேன் – ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட ஸ்டெயின்

- Advertisement -

தென்னாபிரிக்க அணிக்காக 2004 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமான முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் இதுவரை கிட்டத்தட்ட 93 டெஸ்ட் போட்டிகள், 125 ஒருநாள் போட்டிகள் மற்றும் 47 டி20 போட்டிகளில் அந்த அணிக்காக பங்கேற்றுள்ளார். இதுவரை கிட்டத்தட்ட 699 விக்கெட்டுகளை சர்வதேச கிரிக்கெட்டில் அவர் வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி ஐ.பி.எல் போட்டிகளிலும் 95ஆட்டங்களில் 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

steyn 1

- Advertisement -

இப்படி என்றுமே அழியா புகழ் உடன் இருக்கும் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் இன்று தனது ஓய்வு முடிவினை வெளியிட்டு ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளார். கடைசியாக 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடிய அவர் இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது திடீரென அவர் ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார். மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஓய்வு அறிக்கையில் : நான் அதிகம் விரும்பும் விளையாட்டில் இருந்து அதிகாரபூர்வமாக ஓய்வு பெறுகிறேன்.

Steyn

நண்பர்கள், சக அணி வீரர்கள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி இந்தப் பயணம் மிகவும் அற்புதமானது எனது தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Advertisement