இதெல்லாம் டெஸ்ட் மேட்ச்சே கிடையாது.. இந்தியா தென்னாப்பிரிக்கா போட்டி குறித்து – டேல் ஸ்டெயின் கருத்து

Steyn
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது அண்மையில் நடைபெற்று முடிந்தது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்தங்கிய வேளையில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது.

அதன்படி ஜனவரி 3-ஆம் தேதி துவங்கிய இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி தங்களது முதல் இன்னிங்சில் 55 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 153 ரன்கள் குவித்து 98 ரன்கள் முன்னிலை பெற்றது.

- Advertisement -

பின்னர் தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 176 ரன்களை மட்டுமே குவிக்க இந்திய அணிக்கு 79 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதனை துரத்திய இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 80 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது மட்டுமின்றி தென்னாப்பிரிக்கா மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இரண்டாவது முறையாக ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. இந்நிலையில் போட்டி ஆரம்பித்து இரண்டாவது நாளிலேயே நிறைவுக்கு வந்தது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

குறிப்பாக போட்டி நடந்த அந்த மைதானத்தின் மீதும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரரான டேல் ஸ்டெயின் இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டி குறித்த தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள கருத்தில் குறிப்பிடப்பட்டதாவது : விரிசல் விழுந்த ஆடுகளம் என்றால் ஏன் பயப்படுகிறீர்கள்? ஆஸ்திரேலியாவில் சிட்னி, பெர்த் நகரில் உள்ள மைதானங்களும் விரிசல் விழுந்த மைதானங்கள் தான்.

இதையும் படிங்க : அது தெரியலன்னா உங்கள பேட்ஸ்மேன்னு வெளியே சொல்லாதீங்க.. வெளிநாட்டு அணிகள், ஊடகங்களை விளாசிய கவாஸ்கர்

அந்த விரிசல்களுக்கு இடையே கார்களை கூட பார்க்கிங் செய்யலாம். ஆனால் அவர்கள் அங்கு நடைபெறும் போட்டிகளில் நான்கு – ஐந்து நாட்கள் விளையாடி கடைசி வரை கொண்டு செல்கின்றனர். அதனால் மைதானத்தின் மீது எந்த ஒரு குறையும் சொல்வது தவறு. என்னை பொறுத்தவரை இரண்டு நாட்கள் முடியும் போட்டிகள் எல்லாம் டெஸ்ட் போட்டிகளே கிடையாது என்று டேல் ஸ்டெயின் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement