பி.சி.சி.ஐ யின் புதிய தலைவராக பொறுப்பேற்க இருக்கும் தாதா – அறிவிப்பு விவரம் இதோ

BCCI
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யின் தலைவர் பதவிக்கு தற்போது போட்டி நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதை சீரமைக்க நீதிபதி லோதா தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

ganguly-bcci 2

அந்தக் குழு நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நிர்வாக குழுவை தற்போது அமைத்துள்ளது. அந்த லோதா குழு பரிந்துரையின் படி தற்போது பி.சி.சி.ஐக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளது. மேலும் லோதா குழு சார்பில் மாநில கிரிக்கெட் சங்கங்களின் தேர்தல் முடிவடைந்த நிலையில் தற்போது பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு வரும் 23ம் தேதி நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் பிசிசிஐ புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தாதா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கங்குலி தலைவராக பொறுப்பேற்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

Ganguly

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான தமிழகத்தைச் சேர்ந்த என் ஸ்ரீனிவாசன் குஜராத்தை சேர்ந்த பிரிஜேஷ் படெல் என்பவரை தலைவர் பதவிக்கு முன்னிறுத்திய நிலையில் மற்ற மாநில கிரிக்கெட் நிர்வாகிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அனைத்து மாநில நிர்வாகிகளும் ஒருமனதாக இந்திய அணியின் முன்னாள் வீரரும், மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தற்போதைய தலைவரான சௌரவ் கங்குலியை தலைவர் பதவிக்கு முன்னிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ganguly

எனவே பல மாநிலங்களின் ஒத்துழைப்பு உள்ளதால் கங்குலி தலைவர் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே 23-ஆம் தேதிக்கு பிறகு அதிகாரப்பூர்வ தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Advertisement