தோணியுடன் தினேஷ் கார்த்திகை ஒப்பிடாதீர்கள் – தமிழக வீரர் அதிரடி !

- Advertisement -

ஐபிஎல் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஐபிஎல்-இல் பங்கேற்கும் வீரர்கள் பலரும் பத்திரிகையாளர்களை சந்தித்து வருகின்றனர்.அந்தவகையில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்காக விளையாடிவந்த பத்ரிநாத் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.இந்த ஆண்டு ஐபிஎல்-இல் கோப்பையை வெல்லும் வாய்ப்புகள் கொல்கத்தா மற்றும் சென்னை அணிக்கே அதிகம் உள்ளதாக தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் பேசிய அவர் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக்கை தற்போது பலரும் தோனியுடன் ஒப்பிட்டு பேசிவருகின்றார்கள். தோனி கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த வீரர். அவரோடு தினேஷ் கார்த்திக்கை ஒப்பிட்டு பேசுவது சரியானதல்ல.

இறுதி போட்டியில் தினேஷ் கார்த்திக் மிகச்சிறப்பாக விளையாடினார் அதில் மாற்றுக்கருத்தே இல்லை. அது அவரது ஆட்டம். இனிவரும் காலங்களில் அவர் இன்னும் சிறப்பாக விளையாட கடைசி பந்தில் அடித்த சிக்ஸர் உதவும் என்று நம்புகின்றேன் என்றார்.

Advertisement