இந்திய அணிக்கு எதிரான தொடருக்கு அணியில் இணைந்த ஆஸி நட்சத்திர வீரர் – விவரம் இதோ

Short

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைத்தொடர்ந்து இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

aus

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த தொடரின் இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணியும் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த அணியில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான சீன் அபாட் ஏற்கனவே அணியில் இடம் பெற்று இருந்தார்.

ஆனால் தற்போது அவர் பிக்பாஷ் டி20 லீக்கில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரது காயம் குணமாக 4 வாரங்கள் பிடிக்கும் என்பதால் இந்திய அணிக்கு எதிரான தொடரில் இருந்து அவர் விலகினா/ர் அதனை தொடர்ந்து தற்போது அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் இளம் நட்சத்திர வீரரான டி ஆர்சி ஷார்ட் என்ற வீரர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Short 1

ஆஸ்திரேலிய அணியில் ஏற்கனவே மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் மற்றும் ரிச்சர்ட்ஸன் ஆகிய பந்துவீச்சாளர்கள் இருப்பதால் இவரின் விலகலால் பாதிப்பு ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மும்பையில் ஜனவரி 14ஆம் தேதியும், இரண்டாவது போட்டி 17ஆம் தேதி ராஜ்கோட்டில், மூன்றாவது போட்டி ஜனவரி 19 பெங்களூரில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -