யோயோ பயிற்சில் தோல்வியடைந்த ஷமியின் இப்போதைய நிலைமை..!

samistand
- Advertisement -

வரும் ஜூன் 14 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியா வரவுள்ளது. ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை கொண்ட இந்த தொடர் வரும் ஜூன் 14 ஆம் தேதி பெங்களூரு,சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் பங்குபெறும் இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

Mohammed-Shami

- Advertisement -

இந்த போட்டியில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கோலி பங்குபெற மாட்டார் என்று அறைவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ரஹானே இந்த போட்டியில் கேப்டனாக செயல்படவுள்ளார். இந்த போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்ய கடந்த ஒரு வரமாக வீரர்களுக்கு யோ யோ டெஸ்ட் நடந்து வருகிறது. இந்த தேர்வில் வேகப்பந்து வீச்சாளர் மோஹமத் சமி தோல்வியடைந்து, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக சமி தனது குடும்ப பிரச்சனைகளால் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சமீப காலமாக அவர் ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் இன்னும் இரண்டு மாதத்திற்குள்ளாக இந்திய அணி இங்கிலாந்து எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

shami-1

இந்த போட்டி வருவதற்குள் உடல் மற்றும் மன ரீதியாக தயார் செய்து கொள்ளும்படி பி சி சி ஐ சமிக்கு அறிவுரை வழங்கியுள்ளது. சமீபத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் வெளியான தகவலின்படி” சமியின் திறன் குறித்து எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அணியை பொறுத்த வரை சமி உடல் மற்றும் மனரீதியாக பிட்டாக இருக்க வேண்டும் என்பது தான் வேண்டும்.

shamii

அவர் கிரிக்கெட்டில் தொடர்ந்து இருக்க வேண்டும் அவர் மீண்டும் உடல் தகுதி பெற்று திரும்பியவுடன் அணியில் சேர்க்கப்படுவர். அவருக்கு உதவியாக அணி அவருடன் எப்போதும் இருக்கும் ” என்று இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement