எவ்ளோ நேரம் பந்துவீசுனாலும் இவரு அவுட்டே ஆகமாட்றாரு. அவரே டெஸ்டில் சிறந்த பேட்ஸ்மேன் – பேட் கம்மின்ஸ் புகழாரம்

- Advertisement -

இந்திய அணி கடந்த 2018-19 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பங்கேற்று விளையாடிய நான்கு போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று வெற்றி பெற்றது.இதனால் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அதுமட்டுமின்றி ஆசிய கண்டத்தில் முதல் அணியாகவும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அசத்தியது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது அந்த டெஸ்ட் தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை மிகவும் மிகவும் நோகடித்து சிறப்பாக ரன் குவித்த இந்திய வீரர் குறித்து அவர் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் கடினமான பேட்ஸ்மேன் யார் என்று கேட்டால் நான் இந்திய அணியைச் சேர்ந்த புஜாராவை தான் கூறுவேன். ஏனெனில் அவர் எங்களுக்கு அந்த தொடரின் போது பெரிய வலியை ஏற்படுத்தினார். அவரை வீழ்த்துவது அந்த தொடரில் எங்களுக்கு பெரிய விடயமாக மாறியது. மேலும் அந்த தொடர் முழுவதும் எங்கள் அணிக்கு எதிராக அவர் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தினார்.

pujarashot

மேலும் எங்களது அணியின் பேட்டிங் பலவீனமாக இருந்ததால் பந்து வீச்சு மூலம் இந்திய அணி வீழ்த்த நினைத்தோம். ஆனால் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி எங்களை வீழ்த்தினார்கள். விராட் கோலி உள்ளிட்ட வீரர்களை நாங்கள் சமாளித்து வீழ்த்தினாலும் புஜாராவை வீழ்த்துவது இங்கே சிரமமாகி விட்டது.

- Advertisement -

அவர் நீண்ட நேரம் தொடர்ந்து களத்திலிருந்து பந்துவீசும் எங்களை சோர்வடைய வைத்தார் என்று கூறியுள்ளார். புஜாரா அந்த ஆஸ்திரேலிய தொடரில் 7 இன்னிங்ஸ்களில் 3 சதம் மற்றும் ஒரு அரை சதம் அடித்து இந்திய அணியின் ரன் குவிப்பிற்கு பெருமளவில் உதவினார். மேலும் அந்தத் தொடர் முழுவதும் 1258 பந்துகளை சந்தித்த அவர் 521 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

Pujara

மேலும் அது மட்டுமின்றி அதிக பந்துகளை எதிர்கொண்ட இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் பல்வேறு வீரர்கள் இருந்தும் வித்தியாசமாக சிறந்த பேட்ஸ்மேனாக பேட் கம்மின்ஸ் புஜாராவை கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement