இந்திய அணியில் தோனியை போன்று ஆஸ்திரேலிய அணியில் இவரை உருவாக்கி வருகிறோம் – கம்மின்ஸ் அதிரடி

Stoinis

ஒரு காலகட்டத்தில் எல்லாம் 5 முதல் 6 விக்கெட்டுகளை இழந்து விட்டால் எந்த அணியாக இருந்தாலும் அவ்வளவு தான், பேட்ஸ்மேன்கள் எல்லாம் விக்கெட்டுகளை இழந்து விட்டார்கள், இனி நமது அணி வெற்றி பெறாது என்று நினைத்துவிட்டு ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேறி விடுவார்கள். அல்லது டிவியில் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் மனதை விட்டு விடுவார்கள். அதேபோன்று விக்கெட்டுகளை இழக்கும் அணி தோல்வியை அடைவதே தொடர்கதையாக இருந்தது.

dhoni with pant

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் தோனி இதனை அனைத்தையும் மாற்றி விட்டார் . கிரிக்கெட் போட்டியை மிக எளிதாக கையாளலாம், அதே நேரத்தில் 50 ஓவர்களுக்கு எந்த போட்டியாக இருந்தாலும் ஆடவேண்டும். கடைசிவரை போட்டியை நினைத்துக் கொண்டு செல்ல வேண்டும். கடைசி கட்டத்தில் எத்தனை ரன்கள் இருக்கிறதோ அதனை அடித்து வெற்றி பெற வேண்டும் .என்ற ஒரு புதிய விதியை கிரிக்கெட்டில் புகுத்தி வெற்றி கண்டவர் தோனி

அதனால்தான் உலகின் மிகச்சிறந்த பினிஷர் என்று பாராட்டப்படுகிறார். தோனி போல் ஒரு ஆட்டக்காரர் தங்கள் நாட்டிற்கு தேவை என்று பல அணிகளும் கேட்டுக் கொண்டிருக்கின்றன
அதேபோல் தோனி போன்ற ஒரு வீரனை உருவாக்க வேண்டும் என்று தற்போது இருக்கும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளும் விரும்பி கொண்டிருக்கின்றன.

Dhoni

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் தங்களது அணியில் ஒரு தோனியைப் போல வீரரை உருவாக்கி கொண்டிருப்பதாக பேசியிருக்கிறார் அவர் கூறுகையில்…
தோனி ஒரு மிகச்சிறந்த வீரர் அவரைப்போல் ஒரு வீரரை அணியில் வைத்துக் கொள்வதை யார்தான் விரும்ப மாட்டார்கள்

- Advertisement -

அப்படி மிடில் ஆர்டரில் அடித்து ஆடுவதற்கும், திடீரென இறங்கி 50 ரன்கள் அடிப்பதற்கும் ஒரு வீரரை நாங்கள் உருவாக்கிக் கொண்டு வருகிறோம் அவர்தான் மார்க்கஸ் ஸ்டோனிஸ். தற்போது அணியில் இருக்கும் மிகச்சிறந்த அதிரடி வீரர் இவர் தான். இவரை நாங்கள் மெல்ல மெல்ல வளர்த்துக் கொண்டு வருகிறோம்.

Stoinis

அணியும் சரியான சமபலத்தில் இருக்கிறது. இப்படியே சென்றால் எங்களது அணியில் பல அதிரடி வீரர்கள் உருவாகி விடுவார்கள். தோனியை போன்று நாங்களும் ஸ்டோனிஸ்ஸை உருவாக்குவோம் ஆனால் இவை அனைத்தும் ஒரே இரவில் நடைபெற்றுவிடாது இருப்பினும் நிச்சயம் அவர் அந்த கட்டத்திற்கு வுயருவார் என்று தெரிவித்திருக்கிறார் பேட் கம்மின்ஸ்.